thozhiyar
இந்த விமர்சனம் குறித்த எனது கருத்து:
நான் பெண்கள் சந்திப்பு மலர் 2005 படிக்கவில்லை, இப்போதைக்குப் படிக்கக்கிடைக்கும் என்றும் தோன்றவில்லை. இந்த விமர்சனத்தைப் படித்தபிறகு அதைப் படிக்கும் ஆவலும் வரவில்லை.ஆனால், இதில் எழுதியிருப்பது தொடர்பாய் சிலது சொல்லவேண்டியிருக்கிறது.
நான் இந்தக் குறிப்பிட்ட கதைகளும் நிருபாவின் ‘மழை ஏன் வந்தது’ மட்டுமே அவரது வலைப்பதிவில் படித்திருக்கிறேன் (http://www.puluthi.blogspot.com). அதைப் படித்தபிறகு இதைப் படிக்கிறபோது கதை தொடர்பான கோசல்யாவின் பதிவு எரிச்சல் தருகிறது.
—>மலரில் முதற் சிறுகதையாக ‘மழை ஏன் வந்தது” இது நிருபாவின் கதை. நிருபாவின் கதைகள் எப்பவுமே என் பார்வையில் சிரிப்பை ஏற்படுத்துவது இயல்புஇவர் சொல்ல வாறதை அப்படியே சொல்லிவிடும் துணிச்சல் உள்ளவர். பாலியல் துன்புறுத்தல், பால் வேறுபாடு ஒன்று இருந்தாலே போதும் என்ற கருத்தோடுநின்று . உறவுகளுக்கு அப்பால் சிறுமியின் உத்தரிப்பை உரித்துக்காட்டுகிறார். இந்த நாகம் யார் என்பதைக் காட்டாது போனதும் இஅம்மாவே கடைசிவரையும்படுக்கைத்துணையாக வரும் நிலையில் முடித்து விட்டது. மௌனத்தில் பெண்ணியம் வெல்ல முடியாதே என்கிறது .என்னுள்-கோசல்யா
ஏன் சிரிப்பு வருகிறது? நான் நினைக்கிறேன் கோசல்யா நிருபாவின் எழுத்திலுள்ள அங்கதத்தன்மையை அப்படி சொல்கிறார் என்று. ஆனால் சாதாரணமாக –நிருபாவின் கதை படிக்காமல் படிக்கிறபோது- ‘சிரிப்பு வருகிறது’ மிகவும் தட்டையான சொல், குறைந்தபட்சம் அதைக் கூறிய பின் ‘சிரிப்பு ஏன் வந்தது’ என்றாவது எழுதியிருக்கவேண்டும், படிக்கிறவர்கள் ~ஊகிப்பில்~ விடாமல். அவற்றில் ‘மெனக்கெடாமல்’ பிறகு இவ்வாறு எழுதுகிறார்:—->இவர் சொல்ல வாறதை அப்படியே சொல்லிவிடும் துணிச்சல் உள்ளவர். பாலியல் துன்புறுத்தல், பால் வேறுபாடு ஒன்று இருந்தாலே போதும் என்ற கருத்தோடுநின்று . உறவுகளுக்கு அப்பால் சிறுமியின் உத்தரிப்பை உரித்துக்காட்டுகிறார்.-கோசல்யா
???????‘பாலியல் துன்புறுத்தல், பால் வேறுபாடு ஒன்று இருந்தாலே போதும் என்ற கருத்தோடுநின்று’ என்று கோசல்யா நிருபாவைப் பாராட்டுகிறாரா? அப்படிப் படவில்லை. குறைந்தபட்சம், ‘நீ தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் பால் வேறுபாடு என்பதோடையே நிற்கிறாய்’ என்று நேரடியாய் சொன்னாலாவது எழுத்தாளர் அது தொடர்பாய் கருத்துப் பரிமாற வாய்ப்பாவது இருக்கும். தனது வெளிப்படையான எண்ணத்தை எழுதுகிற தைரியம், தைரியம் என்பதை விட ‘நேர்மை’ கூட இல்லை. அவற்றை விடுத்து சும்மா விமர்சனம் என்கிற பெயரில் கண்டமேனிக்கு எழுதினால், வாசிப்பவர்களுக்கு எரிச்சல்தான் மிஞ்சம்.அதிலும் கதை படிக்காதவர்கள் ‘பாலியல் துஸ்பிரயோகம் - பால் வேறுபாடு’ என்பனவை வைத்து கதை பண்ணுகிற இன்னொரு எழுத்தாளராவே நிருபாவைப் பார்த்துவிட்டுப் போவர். இதுதான் இதால் செய்ய முடியும்.
இறுதியாக,—–>இந்த நாகம் யார் என்பதைக் காட்டாது போனதும் இஅம்மாவே கடைசிவரையும்படுக்கைத்துணையாக வரும் நிலையில் முடித்து விட்டது. மௌனத்தில் பெண்ணியம் வெல்ல முடியாதே என்கிறது .என்னுள்-Kausala
மன்னிக்கணும். ஈழத்தில் எங்கோ ஒரு குக்கிராமத்தில் அண்ணன்/அப்பா/மாமா யாரென்றே தெரியாமல் -அவர்களில் யாரோ பாலியல் துஸ்பிரயோகம் செய்ய வாய்ப்பிருக்கிற- சிறுமி பெண்ணியத்தை மௌனத்தில் வெல்ல முடியாட்டில்தான் என்ன???? அவளுக்கும் பெண்ணியத்திற்கும் என்ன சம்மந்தம்? இந்தக் கதைக்கும் பெண்ணியத்திற்கும் என்ன சம்மந்தம்?பெண்ணியத்தை வென்றெடுப்பது பற்றியதா இந்தக் கதை?என்ன அநியாயம்!
அதைச் செய்யவேண்டியது பெண்ணிய அமைப்புகளதும் பெண்ணியச் சிந்தனையாளர்களதும் பெண்ணியவாதிகளதும் வேலை. ஒரு சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்துக்குள்ளாகுறது பற்றிய கதையில் அவற்றைத் தேடுவதானாது பயங்ங்ங்ங்ங்ங்கரமாய் இருக்கிது
கோசல்யா lately நிறைய ~புரட்சிகர~ தமிழ்ப் படங்கள் பார்த்திருப்பார் போல உள்ளது. அதில்தான் சம்மந்தோசம்மந்தம் இல்லாம மட்டுமன்று, கதாபாத்திரத்திற்கு பொருத்தமே இல்லாம் நீள்வசனங்களும் தடாலடி ஆண் இயக்குநர்களின் ~பெண்ணிய~ முன்னெடுப்புகளும் நடக்கும்.
நிருபாவோட கதை ஒரு எளிதான எந்த பெண்ணிய அறைகூவலும் இல்லாத கதை. இதில் பெண்மீதான வன்முறைக்கும் அடக்குமறையளுக்கும் வீடும் குடும்ப அமைப்பும் சமூகமும் எவ்வளவு பங்காளியாகின்றன என்பதான வாசிப்பையே முன்வைக்க முடியும்.அதைவிட்டுவிட்டு வன்னி/யாழ்ப்பாண/மட்டக்களப்பு/திருக்கோணமலை சிறுமியொருத்தி மௌனத்தில் பெண்ணியத்தை வென்றாளா இல்லையா என்பது என்ன புரிதல்?
இவருடைய ‘புரிதல்’ இப்படி இருக்க, இவர் இந்த மலரில் எழுதுகிறவர்கள் பற்றி ,மறைமுகமாய்க் குறிப்பீடுகிற,இந்தக் கட்டுரையில் bold பண்ணி போடப்பட்டிருக்கிற வரிகள் கண்டனத்துக்குரியது. இது இந்த இதழில் எழுதிய/ன பெண்கள் குறித்தது. விமர்சனம் என்றும் சொல்லலாம்.
—>“பெண்கள் சந்திப்பு மலரில் ஆக்கம் வந்துவிட்டால் பெண்ணுக்காக குரல்கொடுத்து விட்டோம். பெண்ணியவாதியாக அங்கீகாரம் பெற்றுவிட்டோம் என்ற எண்ணம் தவறானது”-Kausalya
நல்லது. உண்மைதான். ஒத்துக்கொள்ளலாம் ஆனால் மேன்மைதாங்கிய சகோதரி கோசல்யா அவர்களே!இருப்பிற்காகத்தானே ஆண்களும் பெண்களுமாய் எழுத்தும் வாசிப்பும் இன்ன பிற எல்லாமே? இதில் பெண்கள் சந்திப்பு மலரில்எழுதுகிற பெண்கள் மட்டும் அதில் எழுதினாப்பிறகு “பெண்ணியவாதியாக அங்கீகாரம் பெற்றுவிட்டோம்” என்ற ‘தவறான’ எண்ணம் கொண்டிரூந்தால் என்ன? அதை விமர்சிக்க வேண்டிய தேவை என்ன?அப்புறம் மேற்கிலையே ‘பெண்ணியவாதி’ என்றால் ‘ஒருமாதிரி’ பார்க்கப்படுகிற மையநீரொட்டப்போக்கிலே -‘பெண்ணியவாதி’ என்றால் அங்கீகாரமென்று வெளிப்படையாக எந்த உலகிலும் சாத்தியப்பட்டதில்லை. ஈரோப்பில் அது சாத்தியப்படுகிறதென்றால் உண்மையில் நீங்கள் ‘வெல்ல’ நினைக்கிற ‘பெண்ணியத்தின்’ பொருட்டு உண்மையில் நீங்கள் மகிழவேண்டும்!!
நிற்க,80 களிலிருந்து ஆண்கள் ‘பிடுங்கிற’ இலக்கியச் சந்திப்புக்களை நீங்கள் அறிவீர்கள். அந்தக் காலத்திலிருந்து இலக்கியப் பரிச்சயம் உடைய தாங்கள் (அத்தகு பின்புலத்தையுடை தங்கள் வாசிப்பில் மலருகிற இத்தகு இலக்கியப் புரிதல்களே புல்லிரிக்கிறது!), ஒரு இலக்கியச் சந்திப்பிற்குப்போய்விட்டு வந்து,
“இலக்கியச் சந்திப்பு மலரில் ஆக்கம் வந்துவிட்டால் மானுட விடுதலைக்காக குரல் கொடுத்துவிட்டோம். மானுடநேசகர்களாக அங்கீகாரம் பெற்றுவிட்டோம் என்ற (ஆண்களின்)எண்ணம் தவறானது” எனவிமர்சிப்பீர்கள? மாற்றுக்கருத்துகள் பேசிக்கொண்டிருப்பதால் மட்டும் தாம் மானுட விடுதலை நேசகர்கள் என நம்பிக்கொண்டிருக்கிற ஆண்கள் போலவே இந்தப் பெண்களும் ‘இப்படி’ நினைத்தால் மட்டும் அதை விமர்சிக்க ஏன் தோன்றுகிறது?இது முரண்பாடில்லையா? பெண்களை ‘விமர்சித்து’ வைக்கவேண்டும் என நீங்கள் நினைப்பதில் இருக்கிற ‘அடிப்படையான’ பாரசட்சத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?உலகிலுள்ள அடிப்படையான பாரசட்சங்களைப் பற்றியே எமக்கு சுசீந்திரன் போன்றவர்கள்தானா இன்னமும் பாடம் எடுக்கவேண்டும்??நாங்கள் ‘வால்காவிலிருந்து கங்கைவரை’ படித்து முடித்து அடுத்த கட்டம் நகரவேண்டமா?!இன்னமும் பெண்கள் எப்படிஎப்படியெல்லாம் ‘மகிழ்வு’ கொள்ளக்கூடாதென ஒரு உயர் நாற்காலியிருந்து வரும் விமர்சனம் தேவையா?
படைப்பிற்கான விமர்சனம்படைப்பை சீராக்கும் விமர்சனம்வளராததற்கு காரணமே ‘மற்றவர்களை குட்டி வைக்கவேண்டும்’ ‘அதுவும் உப்புச்சப்பற்ற விடயங்களில்’ என்று வந்ததால்தான் என்று தோன்றுகிறது. இந்த மெனக்கெடலை, ‘குட்டி வைத்தலை’ பெண்களது படைப்புகளின்மீது ‘தைரியமாக’ ‘நேர்மையாக’ தொடர்ந்து வைத்தீருந்தால் மிகவும் நல்ல படைப்பாளிகள் வந்திப்பார்கள். இல்லாததால் (ஆண்களையும் சேர்த்து) பழைய குப்பையைக் கிளறிக்கொண்டிருக்கிறோம்.
ஆகவே சகோதரி கோசல்யா கோவிக்காமல்வெகுசீக்கிரம் பரிஸீலோ எங்கையோ நடக்கக்கூடிய இலக்கியச்சந்திப்பு பற்றி இப்படி ஒரு வசனத்தை
—–“இலக்கியச் சந்திப்பு மலரில் ஆக்கம் வந்துவிட்டால் மானுட விடுதலைக்காக குரல் கொடுத்துவிட்டோம். மானுடநேசகர்களாக அங்கீகாரம் பெற்றுவிட்டோம் என்ற (ஆண்களின்)எண்ணம் தவறானது”———
(இதையே போட்டாலும் பறவாயில்லை) எழுதி, ஒரு விமர்சனத்தை, அதை நீங்களே அல்லது வேறு யாராவது ஒரு ‘பெண்’ எழுதினால் அது இங்கு -தோழியர் இல்- பிரசுரமாகும். ஆப்போது கட்டாயம் இந்த பிரத்தியேக வரிகளைமட்டும் bold பண்ணிப் போடுங்க்ள. சமத்துவம் பிறக்கும்! நன்றி
—Note: இத்தகைய விமர்சனங்களுக்கு ஒன்றும் சொல்லாமல் விடலாம். ஆனால் இதைப் படித்துமட்டும் ஒரு கதையை, படைப்பாளியை மதிப்பிடப் கோகிற இந் நுர்ல் கிடைக்காதவர்களின் பொருட்டு இதை எழுதவேண்டியிருக்கிறது, கோசல்யா ‘மெனக்கெட்டதையும்’விட நேரம் மெனக்கெட்டு.அவ்வளவே.