Sunday, December 04, 2005
About Me
- Name: ஒரு பொடிச்சி
- Location: Canada
ஒரு Columnist (பத்தி எழுத்தாளினி) உருவாகுகிறார்! பராக்! பராக்! எல்லாவிடங்களிலும் பார்த்தால் அரசியல். இலக்கிய அரசியல். அவன் இவன், எக்ஸில் உயிர்நிழல், பின்நவீனத்துவம், செயமோகன், அ.மார்க்கஸ்சு, விடியல், அடையாளம், ரவிக்குமார், காலச்சுவடு உயிர்மை குழப்பமோ குழப்பம்! என்னதான் செய்யிறது? பதிப்பு வசதி இருக்கெண்டிறாங்கள், பதியுங்கோவன் உங்கட எழுத்தையெண்டிறாங்கள். பாவி மக்கள் ஒன்று புரிஞ்சுக்கிறாங்கள் இல்ல, அதுகளுக்கெல்லாம் ஒரு சின்னப் பெட்டை காசுக்கு எங்க போவாள்? இதுகளை எல்லாம் எவங் யோசிக்கிறாங்? 2003ம் ஆண்டில இருந்து (அல்லது அதுக்கு முன்னம்) இருந்த ரென்சங்கள எழுதி எழுதீ வச்சிருக்கிறதுதான். வச்சிருந்தா என்ன, கிடக்கும், என்ன வந்தது, ஆனா இன்னும் அதே ரென்சன் அதே வடிவத்தில திரும்பி வரேக்குள்ள…. ehhhh. இனியும் பொறுத்தா உடல்நலத்துக்குக் கேடு எண்டு out of nowhere ஒரு thinking விட்டன். அதன் விளைவு. விதி இந்த blogகுகளுக்குள்ள blogஆ column எழுத விட்டிட்டுது! இதன் தோற்றத்துக்கு வேற பிரத்தியேக காரணம் ஒண்டுங் கிடையாதுசிலதைப் பாத்தா ரென்சன் வருது, ரென்சன் கூடுறது படிக்கிற பிள்ளையளுக்கு நல்லதில்ல. அந்த ரென்சனக் குறைக்க தேர்ந்தெடுத்த வழியிது. இதப்படிக்கிற ஆட்களுக்க ரென்சன் வந்தா அதற்கு தாற்பரியதாதி(?) நான் இல்ல. Monday, October 04, 2004
2 Comments:
பலிபீடம் என்கிற இந்தப் படத்தில லீனா மையமாய் focus பண்ணாத ஒரு விசயம் (நான் படத்தை பிழையாக விளங்கிக்கொள்ளவில்லை என்றால்): -45-60 வயது ஆண்கள் சிறு பெண்களை மணப்பதுபோல- ஆண் குழந்தைகளை/சிறுவர்களை பெண்களும் (இந்தக் கிராமத்தில்) திருமணம் செய்துகொள்கிறார்கள் என்கிற செய்தி. 12, 13 வயதுப் பிள்ளைகளை அவர்களிலும் வயதான பெண்கள். அதுபோல, கணவன் (60 தோ 70தோ) இறந்தபிறகு, பெண் திருமணம் செய்யக் கூடாது; ஆனால் (இளைஞர்களுடனோ வேறு ஆண்களுடனோ) உறவு வைத்துக்கொள்ளலாம்.
சென்சிற்றிவ்வான விசயங்கள விடுவோம் (பெண்ணின் மாதப்போக்கு நேரம் அவளக் காட்டில் தனியே விடுவது,பெண் விரும்பிய ஆணை இரண்டாம் தரம் 'திருமணம்' செய்ய முடியாமை).
இவற்றை விட்டால், ஒரு கணவனை இழந்த பெண்ணை இன்னொரு உறவு வைத்துக்கொள்வதை இன்னமும் (இனியும்) அனுமதிக்காத 'நகர' 'நாகரீகமடைந்த' சமூகங்களை வைத்துக்கொண்டு மேலுள்ள இந்த இரண்டையும் மாபாதகங்களாய் பார்ப்பது என்னமாதிரியானது?
மேலும்
எங்களைப் போன்ற 'மனிதர்கள் வாழ்கிற' நகரங்களில் இருக்கிற incest ஓ குழந்தைப் பாலியல் தொழில்களோ தராத என்ன அதிர்வை இந்த 'மனிதர்கள் வாழாத சமூகம்' எங்களுக்குத் தருகிறது?
ஒரு வயது போன கிழவியிடம் "(மகளிற்கு) இவ்வளவு சின்னப் பையனைக் கட்டிவைக்கிறிங்களே, தப்பா தெரியல்லியா" (இதை ஒத்தது கேள்வி. ஞாபகத்தில் இருந்து எழுதுகிறேன்) என்பதான கேள்வியை நகரத்து உயர்மட்ட 'சுதந்திரஜீவி'யான லீனா கேட்பது - என் பார்வையில் ஒரு வன்முறைதான். தொலைக்காட்சிகளை, வீடியோக்களை கொண்டு வந்து செய்யிற வன்முறை (நான் அந்தக் கிழவியாய் இருந்தால் திட்டி இருப்பேன்).
அமெரிக்க(!) பழங்குடிகளது reserve ஒன்றிற்குப் போய், அச்சமூகத்தை 'மதிப்பிட்டு' 'வெள்ளைக்கார கல்வி'யை அங்குள்ள ஒவ்வொரு சிறாரும் பெறவேண்டுமென நினைக்கிற ஒரு வெள்ளைத்தனத்திற்கும், லீனா போய் அந்த சமூகத்து சிறுவசிறுமியரை நினைத்து "Education ஒவ்வொரு சிறுவரதும் உரிமை, அதை இந்த ஆணீய (கவனிக்கவேண்டியது: ஆண்களது கல்வியும் அச் சமூத்தில் மறுக்கப்படுதா என்பது தெரியவில்லை!) 'கொடிய சமூகம்' மறுக்கிறது" என narrative (லீனா) சொல்வதும் என்னைப் பொறுத்தவரை வித்தியாசங் கிடையாது; இரண்டும் ஒன்றுதான். இந்த இடத்தில் தோழி சொன்னாள்: "அப்போ (நகரங்களிலுள்ள) குழந்தைத் தொழிலாளர்கள்?!"
அவர் அந்தக் கிழவியிடம் இரண்டுதடவை திருப்பித் திருப்பி இக்கேள்வியைக் கேக்கிறார். தன்வாழ்நாள் பூராவும் அந்த சம்பிரதாயங்களை (Normal ஆன விசயமாய், தங்கட வாழ்வின் ஒரு பகுதியாய்) நம்பின அந்தக் கிழவியின் கண்களில் அச்சமும் கண்ணீரும் எட்டிப் பார்க்கிறது - இது பார்க்க மிகவும் சிரமமான காட்சியாய் இருந்தது ("இந்தச்ச்மூகத்தில் 'தெய்வமும் பெண்தான் பலிபீடமும் பெண்தான்" என்ற குரலிற்குப் பதில், இதை எழுதும்போதும், எனக்குக் கேட்கிற லீனாவின் குரல் அதுதான்). படம் முடிந்தபிறகும் மனசை உறுத்தியது.
இந்தப் படத்தைப் பார்த்தபிறகு - இந்த ஜாதி பின்புலங்கள் தெரிந்தால், 'வீட்டு வேலைக்காக' திருமணம்செய்யப்படுகிற சிறு பெண்கள், அங்கே பாலியல் வன்முறை உண்டா (அது நகரத்திலும் அதிகம் என்று சொன்னால் சிரிப்பத்தான் வரும்) என அவர்களது உளவியலை அறியவே விருப்பமாயுள்ளது.
லீனாவின் படம் அவற்றை அறிகிற ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. அந்த 'மனிதர்கள்' (எனக்கு அவர்கள் மனிதர்களாகத் தெரிகிறார்கள், நகரத்தில் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு மறைவிடங்களில் சிறுவர்களிலும் கிடைக்கிற பெண்களிலும் ஏழை பாலியல் தொழிலாளிகளிலும் பாயக் காத்திருக்கிற எத்தனையோ அறிவுசீவி, சாதாரண ஆண்களை விடவும் எவ்வளவோ(ஓ)படி மேலானவர்கள்தான் இந்த ஆண்கள் தென்படுகிறார்கள், தொடரான கேள்விகளில் கண்கள் புரியாமல் தயங்க வீம்பாய் " 16 வயதில் ஒரு பெண்ணைக் கட்டிவிட்டு, மூன்று வருடங்களுக்குப் பிறகு, இன்னொரு 16 வயதுப்பிள்ளையைக்கண்டுவிட்டேன் அதையும் விரைவில் திருமணஞ்செய்யவேண்டும்" என்று "சொன்ன" அந்த 45 வயது 'பெடியன்' உட்பட. அவர்களை 'குற்றக்கூண்டில்' நிறுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை.) - அது அவர்கள் சமூகத்தில் ஏற்கப்பட்ட, நம்பப்படுகிற, நம்பவைக்கப்பட்ட ஒன்று. இதுக்குள் 'நுழைகிற' அந்நிய ஆட்கள் முன்அனுமானங்களுடன், 'தங்களது' ஒழுக்க மதிப்பிடல்களுடன் இறங்கக்கூடாது. சமூக சேவர்கள், counselors, தம் சக மனிதர்களை மதிக்கவேண்டிய மனிதர்கள் எல்லாருக்குமுரிய முக்கிய விதி இது: "மற்றவர்களை மதிப்பிடாதே ஏனெனில் நீ அவர்களிலும் பார்க்க உயர்ந்தவர் கிடையாது." (உயர்ந்தவர் என நினைத்தால் அது 'பாரபட்சமான' தன்நம்பிக்கையிலாற்பட்ட பார்வை).
அதனால் இந்த உங்கள் விமர்சனம் இது தாற தொனி இது ஒரு வெள்ளைத்தனமாக பார்வை என்பது எனது அபிப்பிராயம்.
இங்கே இறுதியாய் ஒன்றைச் சொல்லோணும்: இவ் விமர்சனங்களைத் தூண்டுவதும் இந்த சமூகத்தைப் பற்றின -/+ அருட்டல்களை உருவாக்குவதும், லீனா போன்றவர்கள் இத்தகைய படத்தை எடுப்பதாலும், எடுக்க ஆர்வப்படுவதாலுமே முன்னெடுக்கப்படுகிறது. லீனாவின் இவற்றிலுள்ள ஆர்வம், energy, இவையைக் குறைக்க அல்ல இதை எழுதுகிறேன். இப்படியான படங்களை எடுப்பது எவ்வளவு 'கவனமாகக்' கையாளப்படவேண்டியது என்பதைக் கூறவே. அத்துடன் லீனா போன்ற ஆர்வம் மிகுந்த ஒருவரால் இத்தகைய விமர்சனத்திற்கு உரிய உரையாடல்களைத் தொடர முடியுமெனவே நினைக்கிறேன்.
#
நல்ல பதிவு டிஜே,
பலிபீடம் பற்றி பெட்டை முன்வைக்கும் கருத்துகளுடன் ஒன்றியே எனது பார்வையும் இருக்கிறது.
குறிப்பாக கனடாவின் முதற் குடிகளை 'முன்னேற்றுவதாக' கூறிக் கொண்டு வெள்ளை-ஐரோப்பிய மதிப்பீடுகளை முதற்குடிகள் மீது செலுத்தி அவர்களின் 'கூட்டு அடையாளங்களை' அழித்ததும்/ அழிக்க முற்பட்டது ஒருவகை காலாச்சார வன்முறையே. அதன் விளைவுகள்தான் முதற் குடிகளின் பிள்ளைகளை பெற்றொரிடம் பிரித்து விடுதிப் பள்ளிகளில் சேர்த்ததும், அவர்களுக்கு ஆங்கிலத்தில் (பிரென்ச்?) உரையாடவும் வற்புறித்தியதும், ஐரோப்பிய வாழ்வுப் பழக்கவழக்கங்களை திணித்ததும். இந்த கலாச்சார வன்முறைகளின் விளைந்த அவலங்களை இப்போதும் நாம் பார்கலாம். ஆகவே, நாம் வைத்திருக்கும் மதிப்பீடுகள் அறிதியானதும் சரியானதும் என்று கூற முடியாது. அவை எப்போதும் பரிசீலைனைக்கு உரியவையே.
நான் பார்த்தளவில் லீனா எங்களில் பலரைப் போலவே தனிமனித சுதந்திரத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார். அவர் இந்த விவரணத்தில் காட்ட முற்பட்டது ஒரு சமூகத்தின் கலாச்சார (கூட்டு) மதிப்பீடுகளால் தனி மனித சுதந்திரம் பாதிக்கப் படுகிறது என்பதே. நீங்கள் கூறிவாறு பலவிடங்களில் அதனைத் துல்லியமாக காட்டியிருக்கிறார். கனடாவின் முதற்குடிகளின் றிசேர்வ்களிலும் அடக்கு முறைகள் இருக்கின்றன. (எந்த சமூகத்தில் இல்லை?) இவை தனி மனித சுதந்திரத்தைப் பாதிகின்றன. ஒப்பீட்டளவில் மட்டுமே தனிமனித சுதந்திரம் சமூகத்துக்கு சமூகம் வித்தியாசப்படும்.
ஆக, இங்கு பிரச்சனை கூட்டு அடையாளம் வ்ச் தனியடையாளம். இந்த இரண்டில் எந்த கருத்தாக்கமும் அதன் தீவர எல்லைகளை அடையும்போது மனிதர் பாதிக்கப் படுகிறனர். இவைகளுக்கிடையிலான ஒரு சம நிலையைக் கண்டுபிடிப்பதே இங்கு இருக்கும் சவால்.
-தர்சன்
By தர்சன், at December 02, 2005 11:41 AM
#
தகவலுக்கு மிகவும் நன்றி டீ சே.
இவ்வாறான முயற்சிகள் எமக்கு இங்கே பார்க்கக்கிடைப்பதில்லை.
பொடிச்சியின் எதிர்வினையோடு பெரிதும் ஒத்துப்போகிறேன்.
By மு.மயூரன், at December 02, 2005 11:50 AM
#
பொடிச்சி, உங்கள் விரிவான பார்வைக்கு மிகவும் நன்றி. ஒரு கருத்தின்மீது வெவ்வேறு பார்வைகளால் இடையீடு செய்யலாம் என்பதுதானே விமர்சனத்துக்குரிய தனித்துவமான அழகு.
....
////இவ் விமர்சனங்களைத் தூண்டுவதும் இந்த சமூகத்தைப் பற்றின -/+ அருட்டல்களை உருவாக்குவதும், லீனா போன்றவர்கள் இத்தகைய படத்தை எடுப்பதாலும், எடுக்க ஆர்வப்படுவதாலுமே முன்னெடுக்கப்படுகிறது. லீனாவின் இவற்றிலுள்ள ஆர்வம், energy, இவையைக் குறைக்க அல்ல இதை எழுதுகிறேன். இப்படியான படங்களை எடுப்பது எவ்வளவு 'கவனமாகக்' கையாளப்படவேண்டியது என்பதைக் கூறவே. அத்துடன் லீனா போன்ற ஆர்வம் மிகுந்த ஒருவரால் இத்தகைய விமர்சனத்திற்கு உரிய உரையாடல்களைத் தொடர முடியுமெனவே நினைக்கிறேன். //
பொடிச்சி, லீனாவின் படைப்புக்கள் மீதான எனது பார்வையும் இவற்றிலிருந்துதான் ஆரம்பிக்கின்றது. எழுதுபவர்கள்/பேசுபவர்களை விட களத்தில் செயற்படுபவர்கள் மீது எனக்கு என்றும் தீராத ஆர்வமுண்டு. என்னால் அப்படியிருக்கமுடியாததால் அல்லது 'அமைப்புக்கள்' என்று கூறப்படுபவையுடன் இணைந்து செயற்படமுடியாத காரணங்களால், இவ்வாறான ஒரு எண்ணம் எனக்குள் தங்கிவிட்டிருக்கலாம். அதுவே லீனா போன்றவர்களின் படைப்புக்கள் மீது நீங்கள் முன்வைக்கும் கறாரான பார்வையை வைக்க முடியாமல் என்னைத் தடுத்திருக்கவும் கூடும்.
நிற்க.
//(1) ஒரு கணவனை இழந்த பெண்ணை இன்னொரு உறவு வைத்துக்கொள்வதை இன்னமும் (இனியும்) அனுமதிக்காத 'நகர' 'நாகரீகமடைந்த' சமூகங்களை வைத்துக்கொண்டு மேலுள்ள இந்த இரண்டையும் மாபாதகங்களாய் பார்ப்பது என்னமாதிரியானது?
(2) எங்களைப் போன்ற 'மனிதர்கள் வாழ்கிற' நகரங்களில் இருக்கிற இன்cஎச்ட் ஓ குழந்தைப் பாலியல் தொழில்களோ தராத என்ன அதிர்வை இந்த 'மனிதர்கள் வாழாத சமூகம்' எங்களுக்குத் தருகிறது?//
பொடிச்சி, நீங்கள் கூறுவதைப் புரிந்துகொண்டாலும், ஆகக்குறைந்தது இவை எனக்குத் தனிப்பட்ட அதிர்வுகளைத் தருகின்றது/தந்துகொண்டேயிருக்கின்றன. அண்மையில் ஒரு பன்னிரண்டோ பதின்மூன்றோ வயதுச் சிறுமியை மூன்று அல்லது நானகு வயதில் இருந்த பையனிடம் உறவுகொள்ளவைக்கப்பட்டு எடுக்கப்பட்ட வீடியோ விவகாரத்திலிருந்து, நண்பொருவரிடம் கதைத்துக்கொண்டிருந்தபோது இங்கே நடைபெறும் (எமது சமூகத்தில்) சிறுவர்/சிறுமிகள் பாலியல் வன்முறைவரை அனைத்துமே என்னைப் பாதித்தபடியேதான் இருக்கின்றது. அவ்வாறான ஒரு விடயத்தை எழுதவோ விமர்சிக்கவோ போகின்றபொழுது அல்லது அதை யாராவது எழுதும்போதோ, 'நாங்களும் மனிதர்கள் அல்ல' என்று எழுதுவதில் எனக்கு எந்தத்தயக்கமும் இருக்காது என்றே நம்புகின்றேன்.
//அந்தக்கிராமத்துப் பெண்கள் தாங்கள் விரும்பியதைப் பேசவும் தெரிவுசெய்யவும் வேண்டிய பொழுதுகள் வருகின்றபோதுதான் அங்கே மனிதர்கள் வாழ்கின்றார்கள் என்று கூறமுடியும்//
இவ்வாறு கூறும்போது நான்/நாம் மனிதர்களாக வாழ்கின்றோம் என்று அர்த்தம் வருவதாகச்சொல்லவில்லை. நிச்சயம் நீங்கள் குறிப்பிட்டமாதிரி, அந்தக்கிராமத்து மக்கள் இன்னும் நீங்கள் இருந்து வருகின்ற நகரங்களில் 'குழந்தைப்பாலியல் தொழிலாளர்கள்/ குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கின்றார்களே நீங்களும் மனிதர்கள் இல்லையென்று கூறினால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். யார் யார் மனிதர்களாய் இருக்கின்றோம் இல்லையென்பதல்ல முக்கிய பிரச்சினை. இவ்வாறான அநீதிகளுக்காய் என்னவிதமான கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கின்றோம் என்பதுதான் எனக்கு முக்கியமானது. ஆகவேதான் கூறுகின்றேன், எழுதுபவர்கள்/பேசுபவர்களைவிட எனக்கு எப்போதும் களத்தில் நின்று சிறுதுரும்பையாவது அசைக்கவிரும்புகின்றவர்கள் மீது அதிக மதிப்பு இருக்கின்றது என்று. என்றோ ஒருநாள் யாரோ ஒருவர்/பலர் கேள்விகள் கேட்கத்தொடங்கியதால்தானே எத்தனையோ விடயங்கள் கேள்விக்குட்படுத்தி சமூகத்திலிருந்து இல்லாமற்செய்யப்பட்டிருக்கின்றது.
அவ்வாறே, அதிர்வுகளை/கோபங்களைக் கொண்ட பலர் நிச்சயம் இருப்பார்கள் என்றே நம்புகின்றேன்.
//ஒரு வயது போன கிழவியிடம் "(மகளிற்கு) இவ்வளவு சின்னப் பையனைக் கட்டிவைக்கிறிங்களே, தப்பா தெரியல்லியா" (இதை ஒத்தது கேள்வி. ஞாபகத்தில் இருந்து எழுதுகிறேன்) என்பதான கேள்வியை நகரத்து உயர்மட்ட 'சுதந்திரஜீவி'யான லீனா கேட்பது - என் பார்வையில் ஒரு வன்முறைதான். தொலைக்காட்சிகளை, வீடியோக்களை கொண்டு வந்து செய்யிற வன்முறை (நான் அந்தக் கிழவியாய் இருந்தால் திட்டி இருப்பேன்).
அமெரிக்க(!) பழங்குடிகளது ரெசெர்வெ ஒன்றிற்குப் போய், அச்சமூகத்தை 'மதிப்பிட்டு' 'வெள்ளைக்கார கல்வி'யை அங்குள்ள ஒவ்வொரு சிறாரும் பெறவேண்டுமென நினைக்கிற ஒரு வெள்ளைத்தனத்திற்கும், லீனா போய் அந்த சமூகத்து சிறுவசிறுமியரை நினைத்து "ஏடுcஅடிஒன் ஒவ்வொரு சிறுவரதும் உரிமை, அதை இந்த ஆணீய (கவனிக்கவேண்டியது: ஆண்களது கல்வியும் அச் சமூத்தில் மறுக்கப்படுதா என்பது தெரியவில்லை!) 'கொடிய சமூகம்' மறுக்கிறது" என நர்ரடிவெ (லீனா) சொல்வதும் என்னைப் பொறுத்தவரை வித்தியாசங் கிடையாது; இரண்டும் ஒன்றுதான். இந்த இடத்தில் தோழி சொன்னாள்: "அப்போ (நகரங்களிலுள்ள) குழந்தைத் தொழிலாளர்கள்?!"//
இப்படியான ஒரு பார்வை ஆரம்பத்தில் அந்தப்படத்தைப் பார்க்கும்போது எனக்கும் வந்தது. பிள்ளைகளைப் படிப்பிக்கவேண்டும் என்று விரும்பியதில்லையா? என்று ஒரு பெண்ணிடம் கேட்கப்படுகின்றபோது, 'எங்களுக்கு உழைத்து வாழ்வதற்கு கையில் தெம்பும், வாயில் சொல்லும் இருக்கிறது....இதை விட என்ன வேண்டும்? ஒன்றுமில்லாத நீங்கள் வேண்டுமென்றால் படித்து பத்தாயிரம் ரூபாய் சம்பாதியுங்கள். ஆனால் நாங்கள் எங்களின் நிலத்தில் கடலை போட்டு அந்தப் பணத்தை சம்பாதிக்கின்றோம்' என்று தமது வாழ்வு முறையைக் கல்வி கொண்டு குறுக்கிடுவதை, கேள்விக்கு உட்படுத்துகின்றார்.
ஆனால் படம் நீள நீள அனேக பெண்கள் படிக்க மிகவும் பிரியப்படுவதாய்த்தான் கூறுகின்றார்கள். மேலும் சொத்து அதிகாரம் என்பவை ஆண்களிடம் இருக்கின்றபோது, பெண்களுக்கான சொந்த தெரிவுக்கான சுதந்திரத்திற்கு கல்விதான் எனக்கு மாற்று வழியாகத் தெரிந்தது. (லீனாவும், எனக்கு இந்தப்பெண்கள் பி.எஸ்சி படித்துவிட்டு கிராமத்துக்கு வந்து இப்போது செய்கின்ற எந்தவேலையைச் செய்தாலும் பரவாயில்லை. ஆனால் அது அவர்களின் சொந்தத் தெரிவாக எவரும் வற்புறுத்தாததாய் இருக்கவேண்டும் என்பதே தனது விருப்பு என்றும் எமது கல்விமுறையையும் கலந்துரையாடலில் கேள்விக்கு உட்படுத்தினார்).
பழங்குடி மக்களில் வெள்ளைத் திமிர் இடையீடு செய்வதை/செய்ததை இங்கே ஒப்பிடமுடியுமா என்ற தயக்கமிருக்கிறது. அங்கே ஒரு சுதந்திரமான உறவுமுறைகளுடன் சந்தோசமாய் இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த மக்கள் மீதுதான் கலாசாரம் என்ற விதத்தில் ஆக்கிரமிப்புக்கள் நடந்திருக்கின்றது. இந்தப்படத்தில் கதைக்கும் வயது முதிர்ந்த ஊர்ப்பெரியவர் கதையைப் பார்த்தாலே அவரது ஆங்கில வார்த்தைகள் சிலவறறையும் கலந்துதான் கதைக்கின்றார். ஆகவே இவர்கள் ஒருபுறம் நவீனத்துவத்துடன் தொடர்புகொண்டபடி இன்னொருபுறம் பெண்கள் விசயத்தின் மிகவும் இறுக்கமாகிக்கொண்டேயிருக்கின்றார்கள் (இன்னொரு அவதானித்த விடயம் ஜக்கம்மா திருவிழாவில் விழாவுக்கு வர்ணனை செய்யும் ஆண்கள் அரசியல்கட்சிகளைப்போல அழகான தமிழில் பேசுவது). அத்தோடு, இந்தப்படத்தில் காட்டப்படுகின்ற பெண்களில் அனேகர் தாங்கள் ஒடுக்கப்படுகின்றோம் என்ற பிரக்ஞையுடன், எதையுமே அசைத்துப்பார்க்கமுடியாத இயலாமையுடன் இருப்பதுபோலத்தான் படத்தைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றியது
நீங்கள குறிப்பிட்ட அந்தப் பெண்மணி கூட, 'எனக்கு வசதி வந்தால் இதிலிருந்து விடுபடவேதான் (சிறுவயதில் திருமணஞ்செய்து கொடுப்பதில்)விரும்புவேன்' என்றுதான் கூறுகின்றார். மற்றும்படி நீங்கள் கூறிய மாதிரி, லீனா தொடர்ந்து அந்தப்பெண்மணியைக் கேள்விகளால் துளைத்தபோது எனக்கும் உறுத்தவே செய்தது.
//இந்த இடத்தில் தோழி சொன்னாள்: "அப்போ (நகரங்களிலுள்ள) குழந்தைத் தொழிலாளர்கள்?!"//
இது எல்லாவற்றையும் ஒரேயிடத்தில் அடக்கவேண்டும் என்ற எண்ணத்தால் வந்த கருத்துப்போல எனக்குத் தோன்றுகின்றது. அதைப் பேசிவிட்டுத்தான் இதையும் பேசவேண்டும் என்று எதிர்பார்பபது கூட ஒருவிதமான வாசக வன்முறைதான். ஆகக்குறைந்து குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி தொடர்ந்து பேசப்பட்டுக்கொண்டேதான் (விளைவுகள் உருப்படியாக இல்லாவிட்டாலும்) இருக்கின்றது. லீனாவுக்கும் அவைகுறித்த பிரக்ஞை இருக்குமென்றே நானும் நம்புகின்றேன். அதற்கு தீர்வு கண்டுவிட்டுத்தான் பிறகு இதைப் பற்றி பேசவேண்டும் என்பது சற்று கோணலாய்த்தான் தெரிகிறது. (புலிகள் X எதிர்தரப்பு செய்யும் கொலைகள் பற்றிப்பேசுகிற உங்களிடம் இங்கு நடக்கும் இளைஞர் வன்முறைக்கு முதலில் தீர்வைக் கூறிவிட்டு, பிறகு அந்தவிடயங்களைப்பற்றி பிறகு பேசுங்கள் என்பதுபோலத்தான் இருக்கும்). மேலும் லீனா தெளிவாகக் கூறுகின்றார்; எனது நோக்கு தீர்வுகளைச் சொல்வதல்ல. தொடர்ந்து இவ்வாறான அநீதிகளுக்காய் கேள்விகள் எழுப்பிக்கொண்டேயிருப்பதுதான் எனது விருப்பு என்று (அதைத்தான அனேக படைப்பிலக்கியவாதிகளும் கூறிக்கொண்டிருக்கின்றார்கள்).
//இந்தப் படத்தைப் பார்த்தபிறகு - இந்த ஜாதி பின்புலங்கள் தெரிந்தால், அனேகமாய் 'வீட்டு வேலைக்காக' திருமணம்செய்யப்படுகிற சிறு பெண்கள் (உதவிக்கு ஆண்இல்லை என்று செய்யப்படுகிற சிறுவர்கள்), அங்கே பாலியல் வன்முறை உண்டா (அங்கு இருக்கக்கூடிய அது நகரத்திலும் அதிகம் என்று சொன்னால் சிரிப்புத்தான் வரும்) என அவர்களது உளவியலை அறியவே விருப்பமாயுள்ளது.
லீனாவின் படம் அவற்றை அறிகிற ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. அந்த 'மனிதர்கள்' (எனக்கு அவர்கள் மனிதர்களாகத் தெரிகிறார்கள், நகரத்தில் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு மறைவிடங்களில் சிறுவர்களிலும்/கிடைக்கிற பெண்களிலும்/ஏழை பாலியல் தொழிலாளிகளிலும் பாயக் காத்திருக்கிற எத்தனையோ அறிவுசீவி, சாதாரண ஆண்களை விடவும், எவ்வளவோ(ஓ)படி மேலானவர்கள்தான் இந்த ஆண்கள் தென்படுகிறார்கள், தனது சமூக நியமத்தை 'புரியாத' லீனாவின் தொடரான கேள்விகளில் கண்கள் புரியாமல் தயங்க வீம்பாய் "16 வயதில் ஒரு பெண்ணைக் கட்டிவிட்டு, மூன்று வருடங்களுக்குப் பிறகு, இன்னொரு 16 வயதுப்பிள்ளையைக்கண்டுவிட்டேன் அதையும் விரைவில் திருமணஞ்செய்யவேண்டும்" என்று "சொன்ன" அந்த 45 வயது 'பெடியன்' உட்பட. அவர்களைக் 'குற்றக்கூண்டில்' நிறுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை.) - அது அவர்கள் சமூகத்தில் ஏற்கப்பட்ட, நம்பப்படுகிற, நம்பவைக்கப்பட்ட ஒன்று. இதுக்குள் 'நுழைகிற' அந்நிய ஆட்கள் முன்அனுமானங்களுடன், 'தங்களது' ஒழுக்க மதிப்பிடல்களுடன் இறங்கக்கூடாது. சமூக சேவர்கள், counselors, தம் சக மனிதர்களை மதிக்கவேண்டிய மனிதர்கள் எல்லாருக்குமுரிய முக்கிய விதி இது: "மற்றவர்களை மதிப்பிடாதே ஏனெனில் நீ அவர்களிலும் பார்க்க உயர்ந்தவர் கிடையாது." (உயர்ந்தவர் என நினைத்தால் அது 'பாரபட்சமான' தன்நம்பிக்கையிலாற்பட்ட பார்வையையே தரும்). //
இதில் மாற்றுக்கருத்துக்கு எதுவுமில்லை. அப்படியே ஏற்றுக்கொள்கின்றேன். அதே சமயம், அந்தப்பெண்களின் மனோநிலை பற்றிய உங்கள் கருத்துக்களைப் பற்றியும் அறிய ஆவல்? அல்லது நகரத்தில் நமது நாகரீகக்கனவானகள் இப்படியிருக்கின்றார்களே, அப்படியே அந்த ஆண்களுக்கும் இருக்கட்டும் என்றால், அந்தப்பெண்களின் வெளி பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? எங்கேயெனினும் பாதிக்கப்பட்டுக்கொண்டு இருப்பது பெண்கள்தானே?
...
//அதனால் இந்த உங்கள் விமர்சனம் இது தாற தொனி இது ஒரு வெள்ளைத்தனமாக பார்வை என்பது எனது அபிப்பிராயம்.//
இதை நீங்கள் என்மீது வைக்கும் விமர்சனமாய் ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமுமில்லை. சிலவேளைகளில் படைப்புகளால் பாதிப்படைந்து அதை மூன்றாம் மனிதராய் வெளியிலிருந்து பார்க்கமுடியாத பார்வையின் நிமிர்த்தம் இப்படியொரு வெள்ளைப்பார்வை விமர்சனத்தை எழுதியிருக்கலாம் என்பதை எனது பார்வையாக முன்வைக்கின்றேன். நன்றி.
...
இதை அவசரமான ஒருபொழுதில் எழுதுகின்றேன். ஆறுதலாக நேரம் வாய்ப்பின் இது குறித்து தொடர்ந்து உரையாட ஆர்வமாகவே இருக்கின்றேன்.
(மேலே காலையில் எழுதியதால் நிரம்பப்பிழைகளும் சொல்லவந்த கருத்துக்களை எழுதுகையில் குழப்பமும் இருந்ததால் திருத்தி மீண்டும் பின்னூட்டத்தில் இடுகின்றேன்)
By டிசே தமிழன், at December 02, 2005 6:14 PM
#
டிஜே, ஒரு பொடிச்சி இருவரின் குறிப்புகளும் இரு கோணங்களிலே படத்தினை விபரிக்கின்றன. நன்றி. ஒரு பொடிச்சியின் வினா நியாயமானதாகவிருக்கலாம்; ஆனால், ஓர் இயக்குநர் ஒரே படத்திலேயே இரு கருத்துகளையும் அடக்கிக் காட்ட முயற்சிக்க முடியாதென்றே படுகிறது. அப்படியாக மணிமேகலை செய்திருப்பாரானால், படம் திசைகெட்டு அலைந்திருப்பதாக முடிந்திருக்கலாம். (படம் பார்க்காமலே கருத்து எழுதியதை மன்னித்துக்கொள்ளுங்கள்)
By Anonymous, at December 02, 2005 6:42 PM
#
இப்படத்தில் நகரவாழ்க்கையோ, அதன் நாகரீகமோ தூய்மையானதென்று சொல்ப்பட்டதா? (அல்லது அந்தக் கருத்துவரும்படி ஏதாவது இருந்ததா?)
இல்லாத பட்சத்தில் பொடிச்சியின் சிலகருத்துக்கள் தேவையற்றவை. முடிந்தால் இன்னொரு படம் நகரத்தின் ஒடுக்குமுறைகளையும் சிக்கல்களையும் விவரித்து எடுக்கலாம். அதையும் லீனா தான் செய்ய வேணுமெண்டு எதிர்பார்க்கிறதும் ஒருவித வன்முறைதான்.
வாதத்தில் எதிராளியை மடக்க முதலவதாகத் தெரிவுசெய்யப்படும் ஆயுதம் (மிக வலிமையானதும் கூட) இன்னொரு விசயத்தைத் தொடர்புபடுத்தி அதில் எதிராளியின் சம்பந்தப்படாமையைச் சொல்வது. "இதைக்கதைக்கும் நீ, அதைப்பற்றிக் கதைத்தாயா?", இப்போது எதிர்க்கும் நீ, அப்போது எதிர்த்தாயா?" என்பதுபோன்ற கருத்துக்கள். வேறோரிடத்தில் வோறோர் மாதிரிக் கருத்துச் சொல்லி பின் இப்போது மாறிப்பேசினாலாவது பரவாயில்லை. கருத்தே சொல்லாமல், சம்பந்தப்படாமலேயே இருந்துவிட்டநிலையில் இப்படிக் கேட்பது சரிதானா?
By ஒரு பொடியன், at December 02, 2005 10:12 PM
#
//இது எல்லாவற்றையும் ஒரேயிடத்தில் அடக்கவேண்டும் என்ற எண்ணத்தால் வந்த கருத்துப்போல எனக்குத் தோன்றுகின்றது. அதைப் பேசிவிட்டுத்தான் இதையும் பேசவேண்டும் என்று எதிர்பார்பபது கூட ஒருவிதமான வாசக வன்முறைதான். ஆகக்குறைந்து குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி தொடர்ந்து பேசப்பட்டுக்கொண்டேதான் (விளைவுகள் உருப்படியாக இல்லாவிட்டாலும்) இருக்கின்றது. .. அதற்கு தீர்வு கண்டுவிட்டுத்தான் பிறகு இதைப் பற்றி பேசவேண்டும் என்பது சற்று கோணலாய்த்தான் தெரிகிறது. (புலிகள் X எதிர்தரப்பு செய்யும் கொலைகள் பற்றிப்பேசுகிற உங்களிடம் இங்கு நடக்கும் இளைஞர் வன்முறைக்கு முதலில் தீர்வைக் கூறிவிட்டு, பிறகு அந்தவிடயங்களைப்பற்றி பிறகு பேசுங்கள் என்பதுபோலத்தான் இருக்கும்).//
இல்ல, அந்த அர்தத்தத்தில நான் எழுதேல்ல நீங்க குறிப்பிடுற உதாரணமும் புரியவில்லையானாலும்,
நான் எழுதியதை எப்படி புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ளமுடிகிறது.
பொதுவா விடுதலைப்புலிகள், (இப்போ தமிழ்த் தேசியம் திருமா ராமதாஸ்),
இப்படியான தலைப்புகளில் பேசுகிறபோது மற்றப் பக்கம், பேசாததையிட்ட முறைப்படும் கருத்துக்கள் வரும்-
இந்த இயக்கம் செய்ததக் கூறுகிறவர் ஏன் பிற இயக்கங்கள் செய்ததச் சொல்லேல்ல, இத்தியாதி, என்று.
அந்தவிதமான வாதத்தில்/கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது; அதனால, லீனா இப்படி இப்படி எடுக்கவேணுமென்று சொல்வதிலோ இத இத எடுக்கலாம் என்பதிலோ - என்னிடம் பரிந்துரைப்புகளும் இல்ல. எதிர்பார்ப்புக்களும் இல்ல. அதில்ல விசயம்.
மேலே எழுதியுள்ளது, அனேகமாய் அந்தப் படம் பார்த்தபிறகு எனக்கு தோன்றியவை.
இந்த படம் அதிர்வுகள் தந்தது என்பது உண்மைதான்.
அது குறித்து, எனக்கெழுந்த கேள்வி: "எங்கள (என்னையும் சேர்த்து) இந்தப் படம் ஏன் பாதித்தது?"
எதியோப்பியாவில் 10,11,12 வயதில் சிறுமிகளை ஆண்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள்... அவர்களது சிறுவம் களவாடப்படுகிறது (இந்தப் படத்திலே போலவே!). இதை ஒத்த நிகழ்வுகள் பின்தங்கிய நாடுகளின் பல பிரதேசங்களில் உண்டு. இதை ஓப்றா வின்ஃறி தொலைக்காட்சிக்காக படம் பிடிக்கிறா. தனது நிகழ்ச்சியில் "அமெரிக்காவில் பிறந்ததற்காக பெண்கள் நீங்கள் ஒவ்வொருவரும் பெருமைப்படவேண்டும்" என ஒரு கருத்தை உதிர்க்கிறார். இது குறித்த ஒரு விமர்சனமா (1) உன்னோட நாட்டுப் பெண்களுடைய நிலமை அப்பிடி என்ன திறமா இருக்கிறது என்று ஒருவருக்கு தோன்றும்; அல்லது (2) அப்படித் தோன்றாது (பதிலாய் "ஊண்மைதான் நாங்கள் அமெரிக்காவில் பிறந்ததற்கு அதிர்டசாலிகள்" எனத் தோன்றலாம்).
இதில உள்ள உளவியல் எனக்கு முக்கியமாப் படுது.
நகரத்தில உள்ள அடக்குமுறைகள் எல்லாம் எங்களுக்குப் பழகிப்போயிட்டுது. அத நாங்கள் தகவமைச்சுக் கொண்டாச்சு. இப்ப 'புதிய' சூழல் அது எங்களப் பாதிக்குது - இந்த அரசியலைத்தான் லீனாவின் படங் குறித்தும் குறிப்பிட விரும்பிறேன் - ஒரு 'விமர்சனமாக' ("சகல சுதந்திரங்களையும் கொண்டுள்ள சுதந்திரஜீவியான பெண்ணாய்" என்பதை ஒத்ததான தன்குரல் இப் படத்தில் லீனாவின் குரலில் பின்னணியில் வருகிறது). இதைக் குறிப்பிடுவதுற்கு, குழந்தை/பாலியல் தொழிலாளர்கள் புறக்காரணங்கள்தானே ஒழிய, அவை, லீனா அடுத்து எடுக்கவேண்டிய ஏலவே எடுத்திருக்கவேண்டிய படங்களின் கருக்களாகவேண்டியவர் அல்லர்.
ஒரு படத்தப் பார்த்தபிறகு அது எழுப்பிற வினைகள்/எதிர்வினைகள் முக்கியமானவை. மேலஉள்ள ஒரு அநாமதேயர் கூறியமாதிரி வேறவேறான பார்வையே இது; -சமூகம் சார்ந்த, இதிலுள்ள குறைபாடுகளைக் குறிப்பிட்டிராத இடத்தே- டீ.ஜே.இன் பார்வைக்கு முழுமையாய் எதிரான ஒரு கருத்தை கொண்டிருந்தததால் அந்தக் கருத்தை இங்கே எழுதத் தோன்றியது. அவ்வளவே.
இதில, (ஒரு பொடியன்) இது முறையா சரியா எனக் கேட்கிற அளவுக்கு "பிரச்சினை" என்னவென்று விளங்கவில்லை.
பொதுவாகவே யாருக்கும் 'தேவை'ப்படும் என எழுதுவதில்லை; அதனால், படத்தின் 'உள்' சொல்லப்பட்ட சட்டகத்துள்ளேதான் விமர்சகர் நின்றாகவேண்டுமென்று சட்டமேதும் இல்லை. ஆனால்
//வேறோரிடத்தில் வோறோர் மாதிரிக் கருத்துச் சொல்லி பின் இப்போது மாறிப்பேசினாலாவது பரவாயில்லை. கருத்தே சொல்லாமல்இ சம்பந்தப்படாமலேயே இருந்துவிட்டநிலையில் இப்படிக் கேட்பது சரிதானா?/
இது என்ன??? லீனா பற்றியதென்றால், அவர் எப்பப்ப என்ன கருத்துச் சொன்னார் எனத் தேடியெல்லாம் எழுதவில்லை; அவரது படங்களிற்கான எனது பார்வையையே எழுதினேன். இன்னார் என்பது படைப்பிற்கு அடுத்ததாக ஆர்வம் தாற விடயமே! ஒரு பாதிக்கிற புனைவுக்குப் போல இத்தகைய படங்கள் பற்றியும் (அப் படம் பேசியது தாண்டியும்!) சிந்திக்கவும் எழுதவும் எனக்கு நிறைய இருப்பதாய் நினைக்கிறேன். அதுதான் படைப்பாளிகளுக்கு உதவும் என்பது எனது நம்பிக்கை.
மற்றது, 'பலீபீடம்' ஆவணப் படம் என்கிற ரீதியிலும் சரியா வரேல்ல என்றுதான் நினைக்கிறேன்; 'விநோதமான' உலகத்துள் நுழைகிற அதிரச்சியைத் தவிர. ஆனால் 'பறை' மிகவும் பாதித்தது. 'மாத்தம்மா'வும் இரண்டொரு வருடங்களிற்குமுன் பார்த்தபோது பாதித்தது (இப்போது மீண்டும் பார்க்கையில் 'விமர்சனங்கள்' இருக்கலாம்; தங்கமணி இதுகுறித்து சுந்தரவடிவேலின் வலைப்பதிவில் எழுதியிருந்தார். ஆனா அந்தப் படமும் முக்கியமானதே).
அந்த சமூகத்தில் பிறக்காத, அந்த சமூகத்து நம்பிக்கைகளை சுமக்காத, அந்த சமூகத்து பெண்ணாய் /மனிதராய் வாழாத 'மூன்றாம் ஆளாய் 'வெளியிலிருந்து பார்க்கிறபோது' அவர்களது நியாயங்களை எனது மதிப்பீடுகளூடாகப் பார்க்காமலிருப்பதே எனது நிலைப்பாடு.
//அதே சமயம், அந்தப்பெண்களின் மனோநிலை பற்றிய உங்கள் கருத்துக்களைப் பற்றியும் அறிய ஆவல்? அல்லது நகரத்தில் நமது நாகரீகக்கனவானகள் இப்படியிருக்கின்றார்களே, அப்படியே அந்த ஆண்களுக்கும் இருக்கட்டும் என்றால், அந்தப்பெண்களின் வெளி பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? எங்கேயெனினும் பாதிக்கப்பட்டுக்கொண்டு இருப்பது பெண்கள்தானே?//
குறிப்பிட்ட இப் படத்தில் ஆண் குழந்தைகள் கட்டி வைபடுவதைப் பற்றியும் (ஒரு காட்சி மட்டும்!) வருகிறது.
அவர்களும் பாதிக்கப்படவே செய்கிறார்க்ள.
இதைப் பற்றி பிறிதொரு இடத்தில விரிவாக எழுதவேண்டுமென்பதாலும்தான் மேலே இன்னு...ம் நீளமாய் எழதவில்லை! அதில் வேறு படங்களையும் முன்வைத்து விரிவாக எழுதலாம் என நினைக்கிறேன். நிச்சயமாக லீனாவிற்கு அதை அனுப்பியும் வைப்பேன்; அதற்கான அவரது கருத்தையும் அறிய ஆவலாய் இருப்பேன்.
நன்றி.
By ஒரு பொடிச்சி, at December 03, 2005 1:25 AM
#
கருத்துக்களுக்கு நன்றி பொடிச்சி. இவ்வாறு தொடர்ந்து எதிரெதிர் கருத்துக்களுடன், தனிமனிதத் தாக்குதல்கள் இல்லாது உரையாடமுடிகின்றது என்பது நிறைவுதருகின்றது. மேலும் நான் படம் பார்த்து/எழுதி முடிக்கின்றவரை தெரியாத கோணத்தை உங்களது பின்னூட்டங்கள் சிந்திக்கவைக்கின்றது. அதற்கும் நன்றி.
...
//புலிகள் X எதிர்தரப்பு செய்யும் கொலைகள் பற்றிப்பேசுகிற உங்களிடம் இங்கு நடக்கும் இளைஞர் வன்முறைக்கு முதலில் தீர்வைக் கூறிவிட்டு, பிறகு அந்தவிடயங்களைப்பற்றி பிறகு பேசுங்கள் என்பதுபோலத்தான் இருக்கும்).//
இந்த உதாரணத்தை நான் குறிப்பிட விளைந்தது, நீ இருக்கும் சூழலின் (குழந்தைத் தொழிலாளர்)விமர்சிக்காமல், தொலைவிலிருக்கும் விடயங்களை விமர்சிப்பதில் என்ன நியாயம்?' என்ற கருத்து வருவதுமாதிரி எனக்கு உங்களது முதலாவது பின்னூட்டம் தெரிந்தது. அதனால் இங்கிருக்கும் பிரச்சினையைப் (இளைஞர் வன்முறைக்கொலைகள்) பேசாமல் ஏன் தொலைவிலிருக்கும் (both புலிகள் X எதிர்த்தரப்பு செய்யும் கொலைகள் ...I didn't mean that you're taking only one side)பிரச்சினையைப் பேசுகின்றாய்?' என்று ஒருவர் இலகுவாய் வினாவமுடியும் என்பதையே குறிப்பிட விளைந்தேன்.
//அதனால, லீனா இப்படி இப்படி எடுக்கவேணுமென்று சொல்வதிலோ இத இத எடுக்கலாம் என்பதிலோ - என்னிடம் பரிந்துரைப்புகளும் இல்ல. எதிர்பார்ப்புக்களும் இல்ல. அதில்ல விசயம். //
நீங்கள் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்று தெளிவுபடுத்தியிருக்கின்றீர்கள். நன்றி.
...
//இதைப் பற்றி பிறிதொரு இடத்தில விரிவாக எழுதவேண்டுமென்பதாலும்தான் மேலே இன்னு...ம் நீளமாய் எழதவில்லை! அதில் வேறு படங்களையும் முன்வைத்து விரிவாக எழுதலாம் என நினைக்கிறேன். நிச்சயமாக லீனாவிற்கு அதை அனுப்பியும் வைப்பேன்; அதற்கான அவரது கருத்தையும் அறிய ஆவலாய் இருப்பேன். //
நல்ல விடயம். அத்துடன் நீங்கள் குறிப்பிடுகின்ற சின்னப்பெடியங்களும் சிறுவயதில் திருமணஞ்செய்து வைக்கப்படுகின்றார்கள் என்பதுவும் முக்கிய அவதானம். நினைவுபடுத்தியமைக்கு நன்றி.
By டிசே தமிழன், at December 03, 2005 1:52 AM
#
பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.
....
தர்சன், நீங்கள் குறிப்பிடும்,
//ஆக, இங்கு பிரச்சனை கூட்டு அடையாளம் வ்ச் தனியடையாளம். இந்த இரண்டில் எந்த கருத்தாக்கமும் அதன் தீவர எல்லைகளை அடையும்போது மனிதர் பாதிக்கப் படுகிறனர். இவைகளுக்கிடையிலான ஒரு சம நிலையைக் கண்டுபிடிப்பதே இங்கு இருக்கும் சவால்.//
இந்த விடயம் கூட விவாதிக்கப்படவேண்டிய முக்கியவிடயம்போலத்தான் எனக்கும் தோன்றுகின்றது.
By டிசே தமிழன், at December 03, 2005 1:56 AM
#
ஐயோ பொடிச்சி,
நீங்கள் சொன்னது பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டதைப்போல (அதையும் நீங்கள் சொல்லித்தான் எனக்கு விளங்கினது) நான் சொன்னதும் ஆகிவிட்டதாக நினைக்கிறேன். நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் வசனம் லீனாவைக் குறித்ததன்று. இந்த வாதத்தோடு சம்பத்தப்பட்டதன்று.
பொதுவாகவே எதிராளியை மடக்கப் பயன்படுத்தப்படும் முறைபற்றி (இதைச் சொல்லும் நீ அதைப்பற்றிச் சொன்னாயா?)த் தான் குறிப்பிட்டேன். மற்றும்படி இங்கே நடக்கும் வாதத்துக்கும் என்னுடைய பின்னூட்டத்துக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பதை இத்தால் உறுதிப்படுத்துகிறேன்.
By ஒரு பொடியன், at December 03, 2005 5:03 AM
#
This sort of cultural relativism
can be used to justify any
violence and status quo. Are not those children entitled to decide about their future.Should tradition
and custom be used to deny them
every right.Podichi may even
justify sati and female infanticide by taking a relativist position.
By ravi srinivas, at December 03, 2005 9:02 AM
Post a Comment
<< Home