Monday, February 28, 2005

test

test blog
for ma use ..

Thursday, February 17, 2005

Man'matham'!

மன்மதராசா

(நிருபாவின் விமர்சனத்திற்கு எனது கருத்தை வைப்பதற்காக எழுதிய பின்னர் மிக நீண்டு விட்டதாக உணர்ந்தேன். ஒருவரின் தனிப்பட்ட தளத்தில் அதிக பகுதியை எடுத்துக் கொள்ள விரும்பாததால் என் தளத்திலேயே பதிந்து விட்டேன்)

நான் அனேகமாக எல்லாத் தமிழ்த் திரைப்படங்களைப் பார்ப்பேன். (சரத்குமார் விஜயகாந்த்?? சத்தியமாய் இல்லை - அஜித் விஜெய் சிம்பு படங்கள் இயக்குனர்கள் கதாநாயகிகளைப் பொறுத்து தெரிவிற்கு வரும்) தரமான படம் எண்டு பேசப்பட வேண்டும் எண்ட கட்டாயம் எனக்கில்லை. உடுப்பு பாட்டு நடிப்பு காட்சியமைப்பு எண்டதுக்காகப் பாப்பதும் உண்டு. வார இறுதி நாட்களில செய்வதற்கு ஒண்டும் இல்லாத பட்சத்தில பல தரமற்ற படங்களை நண்பர்களோட போய்ப் பார்த்திருக்கிறேன்.
திரைப்படம் பாக்கிறது அறிவை வளர்த்துக் கொள்ளுறதுக்கு?? இல்லா விட்டால் நல்ல ஒரு செய்தியைச் சமூகத்திற்குச் சொல்லுது அதைப் பார்ப்பம் எண்டு நான் ஒரு நாளும் நினைச்சதில்லை (முக்கியமாக தமிழ் திரைப்படங்கள்) முற்று முழுசா ஒரு பொழுது போக்குக்காக எண்டு எடுத்துக் கொள்ளுறதால திரைப்படங்களின்ர தரம் என்னை ஒரு நாளும் bother பண்ணினது கிடையாது. தரமான திரைப்படங்களைப் பார்க்க வேணும் எண்ட எனது ஆர்வத்தை பல தேடல்களால திரைப்படவிழாக்களிலையும் விடுபடுறதுகள் DVD யிலும் பாத்து ரசித்து அதிர்ந்து நிறைவாய் உணர்ந்து

மன்மதன் திரைப்படம் திரையரங்கில் “பொப்கோன” கோப்பி சகிதம் நண்பர்களுடன் சென்று பார்த்து மகிழ்ந்து வந்தேன் (Jothika is one of my favorite) சிம்புவின் திரைப்படத்தில் சேரன் மணிரத்தினத்திடம் கிடைக்கும் அந்தக் கொஞ்சத்தையேனும் நான் எதிர்பார்த்துப் போயிருந்தேன் எண்டால் தவறு சிம்புவினுடையது (அல்லது சிம்புவை வைத்து இயக்கியவரிடம்) அல்ல. என்னுடையதே. (மிருணாள் சென்னின் படம் அளவிற்கு சிம்புவின் இல்லை என்று அழுதவர்களும் உள்ளார்கள்)

சிம்பு வயதில் இளையவராக இருப்பதால் பாடல் காட்சிகளில் பார்வையாளர்களுக்கு bore அடிக்காமல் நடனம் ஆடுகின்றார். அவரின் உடைகளின் தெரிவு நன்றாக உள்ளது. கொஞ்சம் நடிக்கவும் செய்கின்றார். இதை விட ராஜேந்திரனின் மகனிடம் எதைத் தாங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

“விருமாண்டி” கனடாவில் திரையரங்குகளில் திரையிடப்பட்ட போது பலர் தமது குழந்தைகளுடன் வந்து பார்த்துச் சென்றார்கள். (ஒரு வேளை தெனாலி போல் இருக்கும் என்ற எண்ணமோ என்னவோ) நேரடி வெட்டுக் கொத்துக்களைக் காட்டும் இது போன்ற திரைப்படங்களை விட “மன்மதன்” எந்த விதத்தில் குழந்தைகளுக்குப் பாதிப்பைத் தரப்போகின்றது என்பது எனக்குப் புரியவில்லை.

“மன்மதன்” திரைப்படத்தின் முக்கிய கரு தவறு செய்யும் பெண்கள்??? (கெட்ட) கொலை செய்யப்படுகின்றார்கள். இது நாயகனின் தீர்ப்பு. புலம்பெயர்ந்து வாழும் எமது பிள்ளைகளுக்கு இக் கரு எந்த அளவிற்குப் புரியப் போகின்றது. (ஒரு வேளை இந்தியா போன்ற நாடுகளின் வாழும் குழந்தைகள் உளவியல் ரீதியான கேள்விக்கு ஆளாகலாம்) ஆனால்; புலம்பெயர்ந்து வாழும் குழந்தைகளின் அகராதியில் “தவறு செய்யும் பெண்கள்?’ என்று ஒன்று இடம்பெறப் போகின்றதா? “This is my mom’s boy friend” என்று அறிமுகம் செய்யும் கலாச்சாரத்தோடு இணைந்து வாழும் எம் குழந்தைகள் “மன்மதன்” திரைப்படத்தில் பார்த்து ரசிக்கப் போவது சிம்பு ஜோதிகாவின் பாடல் காட்சிகளையும் நடனத்தையும் தான்.

கடந்து வந்த தமிழ் சினிமா எமக்குப் புகட்டிப் போனதெல்லாம் என்ன?
ஒரு பெண் பாலியல் வற்புறுத்தலுக்குள்ளானால் அவள் (அவன் எவ்வளவு கெட்டவனாக இருப்பினும்) தன்னைத் தொட்டவனைத்தான் திருமணம் செய்வாள் இல்லையேல் தற்கொலை செய்து விடுவாள்.
பெண் வீட்டுக்கு அடக்கமாக இருந்து கொண்டு கணவனுக்கு தனது கடமைகளைச் செய்து இன்புறுவாள். கணவன் தவறு செய்தால் பொறுத்துக் கொண்டு அவனைத் திருத்தி நல்லவனாக்குவாள்.

நான் சின்ன வயதில் பார்த்த திரைப்படம் பெயர் மறந்து போனேன். சிவாஜி எஸ்.எஸ் ஆர் விஜயகுமாரி தேவிகா நடித்த திரைப்படம் இது. கண்பார்வை அற்ற பெண்ணிற்கு சிகிச்சை நடக்கின்றது. திருமண நாள் அன்றே அவளை விட்டுச் சென்ற கணவன் விபத்தில் இறந்து விட்டதாகத் தகவல் வருகிறது. சிகிச்சையின் பின்னர் முதல் முதலில் முகம் காணாத தனது கணவனைத் தான் பார்க்க வேண்டும் என்ற அவளது ஆசையை நிறைவு செய்ய பின் விளைவுகளை யோசிக்காமல். கணவனின் நண்பனை முன்னே நிறுத்துகிறார் பெண்ணின் தந்தை. நண்பன் பல வழிகளில் அவள் தன்னோடு. தனித்திருப்பதைத் தவிர்க்கின்றான். தனது கணவன் அவன் தான் என்று நம்பி இருந்தவளின் கைகளின் திருமணப் புகைப்படம் ஒன்று கிடைக்கின்றது. தான் மனதால் கணவன் என்று வரிந்து வாழ்பவன் உண்மையில் தனது கணவன் இல்லை என்று தெரிந்த போது கன்னி கழியாத அந்தப் பெண் தற்கொலை செய்கின்றாள். இப்படிப் பட்ட திரைப்படங்கள் கூறாத எந்த விதமான கோழைத் தனத்தை “மன்மதன்” கூறிவிட்டான்?

இப்படியான பெண்களின் முன்னேற்றத்திற்கும் சுதந்திரத்திற்கும் எதிரான திரைப்படங்களையும் இன்னும் தவறு செய்தால் தண்டிக்கலாம் கை காலை வெட்டலாம் பாணிப் படங்களை தானே இந்திய தமிழ் சினிமா காலம் காலமாகத் தந்து கொண்டிருக்கின்றது. இவற்றோடு ஒப்பிடும் போது “மன்மதன்” தரமற்ற திரைப்படமாக இருப்பினும் குரூரமான காட்சிகள் இடம் பெறவில்லை. மாறாக அழகியலுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது என் கருத்து.
நாம் இப்போது – அதாவது ஈழத்தமிழர்களாகிய புலம்பெயர்ந்த நாம் இப்போது இங்கே வாழும் எமது எதிர்காலச் சந்ததிக்காக முக்கியமாக சிந்திக்க வேண்டியது என்னவெனின் பகைவரை அழிப்போம், துப்பாக்கி தூக்குவோம், எதிரிகளை வெட்டுவோம், கொத்துவோம் போன்ற எமது ஈழத்துப் போராட்டப் பாடல்களை முக்கியமாகத் தடைசெய்ய முயற்சித்தல் வேண்டும். – அதிலும் இப்படியான பாடல்களை தமது குழந்தைகளுக்குப் மனனம் செய்யப் பண்ணி அதனைப் பெருமையாக கலை நிகழ்ச்சிகளிலும் வானொலிகளிலும் பாட வைப்பதும். இப்படியான பாடல்களுக்குச் சிறுமியர் நடனம் ஆடுவதும். (ஒரு வேளை மொழி தெரிந்திருப்பின் கனேடிய சட்டம் இவர்களுக்குத் தண்டனை கொடுத்திருக்கும்) தடை செய்யப்படல் வேண்டும். எவ்வளவு தான் நாட்டுப் பிரச்சனையை எமது குழந்தைகளுக்கு ஊட்டினாலும் அவர்கள் வாழும் தளம் இங்குதான். பெற்றோர்கள் துவக்குத் தூக்கக் கற்றுக்கொள் எனின் அவர்கள் தூக்கப் போவது இங்குதான் ஊரில் அல்ல

29 Comments:

karthikramas said...

எனக்கு உங்க லாஜிக்கே புரியலை; எதுக்கு இப்ப திடீர்னு தமிழ் பட விமர்சனம் என்ற இடத்திலிருந்து சொய்ய்ன்னு ஈழத்து விடுதலை/முழக்கம்/அபாயம்னு தாவுனீங்க.
அப்படி எனில் புலம் பெயர் குழந்தைகளுக்கு எப்படி எல்லாம் பயங்கரவாதம் உட்புகும் என்று லிஸ்டாவது போட்டிருக்கனும் :-(

9:30 PM
karthikramas said...

12 வயது செந்தூரனுக்கு புரிவது எப்படி உங்களுக்கு புரியாமல் போவது எப்படி என்று யோசித்தால் தலை சுத்துது!

9:31 PM
கறுப்பி said...

This post has been removed by the author.

7:04 AM
கறுப்பி said...

கார்த்திக் தங்களுக்கு என்ன புரியவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. புலம்பெயர்ந்த சிறுவர் சிறுமியர்களுக்கு “தவறான பெண்” என்று அகராதியில் இருக்க இடமில்லை. அதாவது இங்கு கலாச்சாரம் அப்படியாக உள்ளது. எங்கட ஊரிலிருந்து அண்மையில் வந்தவர்களுக்கு வேண்டுமானால் அப்படியான சிந்தனைகள் இருக்கலாம். காதலர்களை அடிக்கடி மாற்றிக் கொள்வது என்பது இங்கு சகஜம் (எங்கள் இளையவர்களையும் சேர்த்துத்தான் சொல்கின்றேன்) தமக்கான சரியான ஜோடியை கண்டு கொள்ளுமட்டும் பலரை “டேற்ரிங்” இற்கு அழைத்துச் செல்வது இங்கே சகஜம். இந்த நிலையில் வளரும் எமது குழந்தைகள் ஒரு பெண் பல ஆண்களுடன் பழகுவதை “தவறான பெண்” என்று கணிக்கப் போவதில்லை. அனேகமான சிறுவர்களுக்கு ஆண்கள் பெண்கள் என்ற பேதம் இல்லை (Thank God) இதனால் “மன்மதன்” திரைப்படத்தில் சிம்பு தவறான பெண்களைக் கொல்லுகின்றான் (கொலை நேரடியாகக் காட்டப்படாத பட்சத்திலும்) என்ற லாஜிக் விஜய்யும் அஜித்தும் தவறானவர்களை அடித்துக் கொட்டுவதிலும் பார்க்கத் தாக்கப் போவதில்லை என்பது தான் என் கருத்து.

மேலும் ஈழத்து அபாயம் என்று காரணமில்லாமல் தாவினதாக தாங்கள் எண்ணி விட்டீர்கள். நிருபா “மன்மதன்” திரைப்படத்திற்கு வைத்த விமர்சனமே புலம்பெயர் குழந்தை ஒன்று இப்படத்தைப் பார்பதனால் ஏற்படப்போகும் தாக்கம் பற்றியது எனும் போது இந்திய கீழ்த்தரத் தமிழ் திரைப்படங்களால் ஏற்படப்போகும் பாதிப்பை விட எமது மக்கள் “கட்டாயம்” என்பதாகவும் தமது தமிழுக்கும் நாட்டுக்கும் சாதகமாகச் செய்வதாக எண்ணித் தமது குழந்தைகளுக்கு பாடல்கள் பேச்சுப் போட்டிகள் நடனங்கள் மூலம் வன்முறையைக் கற்றுக் கொடுக்கின்றார்கள். இங்கே பிறந்து வளரும் ஒரு குழந்தைக்கு துவக்குத் தூக்கு என்று பெற்றோரும் தமிழ் ஆசிரியர்களும் கற்றுக்கொடுக்கும் போது அந்தக் குழந்தை துவக்குத் தூக்கப் போவது தான் வாழும் புலம்பெயர்ந்த நாட்டில் தான். அதன் பின்னர் தமிழ் திரைப்படங்களில் வரும் வன்முறையைப் பார்த்து விட்டு எமது பிள்ளைகள் துவக்கைத் தூக்குகிறார்கள் என்பது வெறும் அபத்தம்.

“மன்மதன்” மிகவும் தரமற்ற ஆனால் அதிகம் வன்முறையைக் கொண்ட படமல்லை. கரு தவறானது கீழ்த்தரமானது அது எமக்கு. பெண்ணியம் பேசுபவர்களுக்கும் முற்போக்குச் சிந்தனை கொண்வர்களுக்குமே. “மன்மதன்” திரைப்படம் குழந்தைகளுக்குப் பாதிப்பைக் கொண்டு வரும் என்பது என்னைப் பொறுத்தவரை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது.
இப்படியான ஒரு கீழ்த்தரமான திரைப்படத்தை கமலஹாசனோ இல்லை பாலுமகேந்திராவோ தந்திருந்தால் நாம் சீறிப்பாயலாம். இது சிம்புவினுடையது. தனது பெயருக்கும் இருப்பிற்கும் அலட்டிக் கொள்ளும் (முதலில் சுப்பர் ஸ்டார் என்று வந்து விட்டு தற்போது மெல்ல கமலை கொப்பி அடிக்கும்) ஒரு இளைஞனின் திரைப்படத்தில் லாஜிக்கைத் தேடினால் தவறு எங்களுடையதே

8:09 AM
karthikramas said...

அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு , குரூரமான கருத்தாக்கத்தை பரப்புவது, அது பரப்படுவத்ற்கு அனுமதிக்கும் சமூகம் அதன் கோளாறுகள் என்றுதான் நான் நிருபமாவின் பதிவை வாசித்து புரிந்து கொண்டேன். அல்லது அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று எண்ணுகிறேன். தமிழகத்தில் இது ஏற்படும் தாக்கங்களும் புலம் பெயர் சூழலிலே இது ஏற்படும் தாக்கங்களும் வேறு வேறு அளவில் இருப்பதை குறித்து நீங்கள் சிந்திக்கிறீர்கள். நான், இது போன்ற்
கருத்தை செய்வதும், அது சூழலிலே வெற்றிப்படமாகி ஒட்டுவதும் குறித்துச் சிந்திக்கிறேன், உங்களையும் சிந்திக்கசொல்கிறேன். இப்படி ஒரு குரூரமான திரைப்பட வன்முறையை, ஈழ விடுதலை முழக்கங்களோடு நேரடியாய் எதிர்மறையாய் பார்த்து கருத்து சொல்ல முடியாது. முன்னதின் காரண காரியம் வேறு. பின்னதிற்கு இருக்கும் அவசியம் வேறு; அது வெளிப்படும் மனங்களின் ஆதங்கங்கள் வேறு. [அதற்காக "கொல் " என்ற பாடலையும் அதன் வன்முறையும் அங்கீகரிக்கரிக்கிறேன் என்று தவறுதலாக புரிந்துகொள்ளமாட்டீர்கள் என்று நம்புகிறேன் ]

நான் முழுக்க யோசிப்பது, எதிர்மறையாய் , இப்படி பலவந்தம் செய்த ஆண்களை ஒரு பெண் கொலை செய்வதாய் ஒரு படம் வெகு ஜன் தளத்திலே எடுக்க முடியுமா? அது வெற்றிப்படம் ஆகுமா என்பது குறித்து. அதற்கான காரணிகள் குறித்து. இப்படி யோசித்தால் நான் சொல்லவருவது புரியும் என்று நினைக்கிறேன்.

///“மன்மதன்” மிகவும் தரமற்ற ஆனால் அதிகம் வன்முறையைக் கொண்ட படமல்லை. கரு தவறானது கீழ்த்தரமானது அது எமக்கு. //
நீங்கள் இப்படி முதல் முறையாய் எழுதியிருப்பது லேசாய் ஆறுதல் அளிக்கிறது.

புலம் பெயர் சூழலில் இது ஏற்படுத்தும் தாக்கம் குறைந்தது என்பதால் இந்தக் கரு எந்த விதத்திலும் நியாயப்படுத்தமுடியாது என்பது மட்டுமே சொல்ல விழைந்தது.

னீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி!

9:10 AM
கறுப்பி said...

கார்த்திக் நீங்களும் நானும் ஒரே நோக்கத்தைத் தான் இரு வடிவங்களில் பார்க்கின்றோம். எனக்கும் ஆண் குழந்தைகள் இருக்கின்றார்கள். நான் ஒரு போதும் அவர்களுக்கு தமிழ் படங்களை recommend பண்ணுவதில்லை. (நான் சொன்னாலும் அவர்கள் புரிதலில் தமிழ் படங்கள் sucks ஆகத்தான் உள்ளன.) எல்லாத் தமிழ்ப்படங்களும் பெண்களை மிகவும் கீழ்த்தரமாகவும் அவர்களுக்கான தனித்தன்மை அற்ற ஆண்களைக் கவரும் ஒரு ஜந்து போல்தான் திரிக்கப்பட்டு காட்டப்படுகின்றன. இத்திரைப்படங்கள் சக்கை போடு போட்டுக் கொண்டுமிருக்கின்றன. இப்படியிருக்கும் போது “மன்மதன்” மட்டும் எப்படிக் கேள்விக்குள்ளானது என்பது தான் என் கேள்வி. (ரமணிச்சந்திரனைப் படித்து விட்டு ஐயோ பெண்களை இப்படியாகச் சித்திரிக்கின்றாரே என்ற கதறல் எமது அறியாமையே தவிர அவரின் பிழையல்ல) “மன்மதன்” பார்த்து விட்டுத் தவறு செய்யும்?? பெண்களைக் கொல்ல வேண்டும் என்று ஒரு இளைஞன் சிந்திப்பான் என்பது அபத்தம். அப்படியாயின் இந்திய அரசியல் பற்றியும் பிழை செய்பவர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள் என்பது போன்ற திரைப்படங்களாலும் இந்தியா எப்போதோ திருந்தியிருக்கும். பெண்கள் எல்லோரும் “கற்பு”?? என்று ஒன்றைப் போற்றிக் கொண்டு தாலியைக் கண்ணில் ஒற்றிக்கொண்டும் தான் இருப்பார்கள். (புலிநகற் கொன்றை போன்ற படைப்புக்களும்ää ஜானகி ராமனுக்கும் வேலையில்லாமல் போயிருக்கும்)

10:27 AM
Anonymous said...

This post has been removed by a blog administrator.

10:59 AM
கறுப்பி said...

This post has been removed by the author.

11:14 AM
கறுப்பி said...

எழுத்து பேச்சு நாகரீகம் என்பது பிறப்பில் வரவேண்டும். அதனைத் தொலைத்துவிட்டால்? இப்படித்தான் அனாமதேய பெயர்களில் குலைக்க முடியும்

மனுஷபுத்ரன் கூறியதையே நானும் கூறுகின்றேன். பேரைக் காண்பிக்கத் துணிவற்ற முதுகெலும்பில்லாத கோழைகளுக்கு நான் பதில் கூறப்போவதில்லை.

Its not going to work gal.

11:28 AM
-/பெயரிலி. said...

நீங்கள் விலக்கியிருக்கும் அநாமதேயம் என்ன விதத்திலே எதைச் சொல்லியதோ நான் அறியேன். ஆனால், நீங்கள் gal என்று சுட்டி பெண் என்பதைச் சொல்லிவிட்ட பிறகும் தமிழ்வலைப்பதிவுகுமுகாயம், மனுஷ்யபுத்திரன் எனும் அப்துல் ஹமீது சொல்லியது -/பெயரிலி. என்பதாலும் மேற்கூறிய மன்மதராசாவுக்குப் பின்னூட்டம், புலம் பதிவிலே நேற்று இட்டிருப்பதாலும், அநாமதேயம் நான் என்று எண்ணிக்கொள்ளமுன்னாலே, இங்கே மறுப்பினைப் பதிவு செய்து கொள்வது நல்லது என்று நினைக்கிறேன். மிகுதிப்படி, "எழுத்து பேச்சு நாகரீகம் என்பது பிறப்பில் வரவேண்டும்" என்பது விவாதத்துக்குரியது. கூடவே, அநாமதேயம் இடுப்புக்குக் கீழே தாக்குதல் இடாதவரைக்கும், அநாமதேயமும் கறுப்பியும் வலைப்பதிவாளர்களுக்கு அநாமதேயமல்லவா? அந்நிலையிலே, "பேரைக் காண்பிக்கத் துணிவற்ற முதுகெலும்பில்லாத கோழைகள்" என்பதற்கு எதுவித அர்த்தமும் இல்லை என்ரே தோன்றுகின்றது.

12:24 PM
கறுப்பி said...

பெயரிலி நிச்சயமாகத் தாங்கள் என்று நான் எண்ணவில்லை. புனைபெயர் என்பது வேறு. தாக்கவேண்டும் என்பதற்காகவே பெயர் இருந்தும் அனாமதேயமாக வருவது என்பது வேறு. அடையாளம் காட்டாத வரை நாகரீகம் என்பது தேவையில்லை என்பது சிலர் எண்ணம். பெயரிலியாக வந்தாலும் நாகரீகமாக எழுதவேண்டும் பேசவேண்டும் என்பது நிச்சயமாகப் பிறப்பில்தான் வரவேண்டும். நாகரீகமற்ற தன்மை சிலருக்கு மட்டுமே சொந்தமானது

1:22 PM
வசந்தன் said...

பிறப்பில் தான் வரவேண்டுமென்றால் அந்த அநாமதேயங்களிடத்தில் எந்தப் பிழையுமில்லையென்றல்லவா ஆகிவிடும்.

2:15 PM
வசந்தன் said...

றாஜி! கோவிக்கக் கூடாது, உங்களிட்ட ஒரு கேள்வி. இதே பின்னூட்டத்தைத் தான் முன்பும் இட்டிருந்தீர்களா? இல்லை சிறு திருத்தங்களேதும் செய்தீர்களா? ஏனென்றால் இந்தப்பின்னூட்டத்திற்கா கறுப்பி பிறப்புப் பற்றியும் நாகரிகம் பற்றியும் கூறினார் என்பது சந்தேகமாயுள்ளது. அதுதான் கேட்டனான்.

3:32 PM
raji said...

This post has been removed by a blog administrator.

4:23 PM
000000000000000000000000
THE REMOVED POST IN http://puluthi.blogspot.com/2005/02/blog-post_14.html#comments

At 9:38 PM, raji said...

Manmathanal vantha vinayku maruvinay. Thodakina Nirubaku uthaykanum.(Joke)
கறுப்பிக்கும் பொடிச்சிக்கும் ராஜி ஆகிய எனது பதில்.
நான் மதியம் 2 மணியளவில் தான் கறுப்பியின் பதிவைப் பார்த்தேன். உடனடியகாப் பதில் எழுதாதிற்கு உள்நோக்கம் எதுவும் இல்லை. எனது நேரம்தான் பிரச்சனை. எனது குழந்தைகளை பாடசாலையில் இருந்து ஏற்றிவந்து சங்கீத வகுப்பு(களுக்கு) கொண்டுபோய் விட்டுவிட்டு முடியும் வரை உறவினர் ஒருவரின் வீட்டில் இருந்துவிட்டு பிறகு பிள்ளைகளை வீட்;டிற்கு ஏற்றிவந்துää அவர்களின் பாடுபார்த்து பின் மெட்டிஓலி பார்த்து விட்டு ‘செல்வி’ தொடங்கவும 11.00 (பி.இ) அதை விட்டுவிட்டு கணணிக்கு வந்தால் பெட்டையின் என்பற்றிய சந்தேகம் பிரசுரமாகியிருந்தது. ஆகவே ‘பெட்டை’ அவர்களே இப்போது உங்குகளுக்கு என் காலதாமதத்தால் என் நேர்மைமீது வந்த சந்தேகம் போயிருக்கும் என நம்புகிறேன். அதைவிட உங்களைப் போல நான் எழுதினேன் என்பதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை. ஜெயமோகனை யாரும் விமர்சிக்கலாம் தானே.

சரி இனி கறுப்பியிடம் வருவோம்:

நீங்கள் கூறிய பெயரில் எனக்கு சகோதரி யாரும் கிடையாது. நான் உங்களுக்கு பழைய நண்பியும்; கிடையாது. உங்கள் அறிவுக்கு பதில் தரமுடிந்திருந்தால் நீங்கள் முதலில் பதிலைத் தந்திருக்கவேண்டும். பின்புதான் மற்றய உங்கள் சந்தேகம்களைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும். அதைவிடுத்து அந்த சகோதரிகளை இழுத்து தரக்குறைவாகப் பேசியது சுத்த அனாகரிகமானது. விமர்சனத்துக்கு முகம்கொடுக்க திராணியற்று விமர்சனத்தையே பத்தியிலிருந்து நீக்கிய நீங்கள் இலக்கியத்தில் பெரிதாக சாதித்ததாக சொல்வது சுத்த அபத்தம். மானிசியபுத்திரனின்ää பெயரிலி ஆகியோர் சம்மந்தப்பட்;ட அண்மைய விவாதத்தைப் பார்த்தால் விமர்சனத்தை எப்படி எதிர்கொள்வது என்பதை அறிவீரகள். அதைவிடுத்து விருதுகளை வைத்து ஒருவரின் திறமையை அளவிடுவதாயின் தமிழர்தகவல் திருச்செல்வத்திடமும்ää தமிழன் வழிகாட்டி செந்தியிடமும் தாரளமாக விருது வாங்கலாம். நீங்கள் குறிப்பிட்ட சகோதரிகளுக்கு என்னைத் தெரியாவிடினும் எனக்கு அவர்களை ஓரளவு தெரியும். அதனால்தான் சொல்கிறேன் அவர்கள் விடுதலைப் பாடலுக்கு வக்காலத்து வாங்க இவளவு அக்கறையாக வருவார்கள் என நான் நினைக்கவில்லை. உங்களுக்கும் இது புரிந்திரு;க வேண்டும். மீண்டும் சொல்கிறேன் (எச்சரிக்கிறேன்) உங்களை விட உயரமான விடயங்களில் தலையை விடாதீர்கள.;;

பி.கு: சகோதரிகளை வம்புக்கிளுத்து அனாகரிகமாக கதைத்ததிலிருந்து அவர்களுக்கும் உங்களுக்குமான மோதலில் உங்கள் பக்க நியாயம் எப்பிடியிருக்கும் இருக்கும் என்பதை வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியுமென்று நினைக்கிறேன.

Raji Selvakumar

------------------------00000000000000000000000000000000000

pooraayam said...

இது சம்பந்தமா பின்னூட்டமிடுவம் எண்டு வெளிக்கிட்டனான். கொஞ்சம் நீண்டாப்போல அத என்ர பதிவில போட்டிட்டன்.
-வன்னியன்-

4:26 PM
ROSAVASANTH said...

///.........நாகரீகமாக எழுதவேண்டும் பேசவேண்டும் என்பது நிச்சயமாகப் பிறப்பில்தான் வரவேண்டும். நாகரீகமற்ற தன்மை சிலருக்கு மட்டுமே சொந்தமானது//

மீண்டும் வலியுறுத்தியுள்ளதை இன்னும் கொஞ்சம் ஆதாரபூர்வமாய் உதாரணத்துடன் விளக்கமுடியுமா? மேலும் யார் அந்த சிலர் என்று?

5:01 PM
karthikramas said...

//“மன்மதன்” மட்டும் எப்படிக் கேள்விக்குள்ளானது // என்பதற்கு மட்டும் பதில் சொல்லவேண்டியுள்ளது என்று எண்ணுகிறேன்.

இதுவரை வந்த படங்களில், பெண்களை ஒரு கட்டுப்பட்டுக்குள் நடத்துவது போன்றும், அது வரவேற்கப்படுவது போன்று (உதாரணமாய் , கணவன் வீட்டுக்கு வந்தவுடன் ஷூ வை கழட்டிவிடுவது, காபி கொண்டு வந்து கொடுப்பது) காட்டப்பெறும் . இது 70 களில் , 80 களில். தற்போதைய படங்களில் பெண் மிக அடக்கமானவளாகவும், ஆண் 10 20 ரவுடிகளை தேவையே இல்லாமல் அடித்துப்போடும் பராக்கிரமசாலியாகவும் வருணிக்கப்பெறுகிறது. இதன் உச்சக்கட்ட நிலைதான் , பெண் ஏமாற்றினால் குற்றம் எனபதாய் காட்டப்பெறுவதும்.

இந்தப்படத்தில் பெண்செய்தது குற்றமாய் காட்டபடுவதோடல்லாமல், அதற்கு மிகவும் (எல்லோராலும் ) ஒத்துக்கொள்ளப்படக்கூடிய தீர்மானமாய் , அது போல் ஏமாற்றும் பெண்களை கொல்வது முன்வைக்கப்படுகிறது. அதுவும் நிறைய பெண்களை கொலை செய்வது சூட்ட்சுமமாய் புரியவைக்கப்டுகிறது. இப்படி ஒரு கருத்து பிறப்பதற்கு காரணம் , ஆண்வர்க்க மேலாதிக்கம் தான் என்கிறேன்.
இதில் கடினாய் விளங்கிக்கொள்ள ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.!!

5:54 PM
கறுப்பி said...

This post has been removed by the author.

7:13 AM
கறுப்பி said...

மன்மதன் விமர்சனத்தில் பங்குபற்றிய அனைவருக்குமான இதை நான் எழுதுகின்றேன்.
எழுத வேண்டாம் ஒதுங்குவோம் என்று முதலில் எண்ணியிருந்தேன் ஆனால் (அவர்கள்) விடுவதாய் இல்லை. பலருக்கு நான் எழுதியதில் சிறிய குழப்பமும் வந்திருக்கும் எனவே எழுதுவது எனது கடமை என்று எண்ணி எழுதுகின்றேன்.
கனடாவில் ராஜி ரோசி என்று இரு சகோதரிகள் இருக்கின்றார்கள். இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்ததால் சிலகாலம் எங்களுக்குள் நட்பு?? இருந்தது. பின்னர் அவர்களின் போக்கு எனக்கும் என் போக்கு அவர்களுக்கும் பிடிக்காமல் விலகிவிட்டோம். முற்றாக வைக்கப் பட்ட முற்றுப்புள்ளி என்னைப் பொறுத்தவரை. ஆனால் அவர்கள் விடுவதாய் இல்லை. ஆண் பெயரில் எனக்கு மின்அஞ்சல் மிகவும் கீழ்த்தரமாக எழுதி எனது தனிப்பட்ட வாழ்க்கை யாருடன் எனக்குத் தொடர்பு இருக்கின்றது போன்ற கேள்விகளைத் தொடுத்தார்கள். அவர்களின் நண்பன் ஒருவருடன் எனக்குத் தொடர்பு என்றேன். தாம்தான் அந்த மடலை எழுதியது என்று எனக்குப் புரிந்து விட்டது என்று தெரிந்து கொண்டு மடல் போடுவதை நிறுத்தி விட்டார்கள். (அவர்களைப் பொறுத்தவரையில் தாம் பெரும் ஜீனியஸ் மற்றோர் எல்லாம் முட்டாள் என்று எண்ணும் முட்டாள் அவர்கள்)
ஜெயமோகன் கூ10ரியா எனும் பெயரிலும் நேசகுமார் எனும் பெயரிலும் தனது படைப்புக்களுக்காக விமர்சனம் எழுதுகின்றார் என்று கூச்சல் போடும் இந்தச் சகோதரிகள் பல ஆண்டுகளாகத் தமது படைப்புகளுக்கு இதைத் தான் செய்து வருகின்றார்கள். பாவம் ஜெயமோகன். அவருக்கு ஒரு தம்பி இல்லை அவரது படைப்புக்களைத் தூக்கி ஏத்த. இவர்கள் இப்படியாகச் செய்தது கனடாவில் பலருக்குத் தெரியும் பலருக்குத் தெரியாது இப்போது தெரிந்து கொள்ளட்டும்.

இலக்கிய உலகம் வெறும் குப்பை என்று ஒதுங்கிக் கொண்ட இந்தச் சகோதரிகள் என்மேல் கொண்ட காழ்புணர்வால் (ஏனென்று இன்னும் எனக்குப் புரியவில்லை) என் படைப்புக்களை படைப்பே இல்லை என்று பல ஆண்டு காலமாகப் பலருக்குப் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். (நாடு கடந்து தொலைபேசியில் கூடச் செய்து வருகின்றார்களாம்) இதில் எடுபட்டவர்கள் பலர். எடுபாடாதவர்களும் சிலர். இவர்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது என் படைப்ப நன்றாக இருப்பதாக் கூறினால் உடனே அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நக்கலடிப்பார்கள். இல்லாவிட்டால் ஜெயமோகன் எல்லோரையும் நக்கலடிக்கின்றார். தனது படைப்பைத் தவிர மற்றவற்றை தரமற்றது என்கிறார் என்று விமர்சிக்கும் இவர்கள் செய்வதும் அதைத்தான். தம்மைத் தவிர கனடாவில் இருப்பவர்கள் ஒருவருக்கும் ஒன்றும் தெரியாது என்பதுதான் இவர்கள் கருத்து.
உங்களை எப்படியாவது கொச்சைப் படுத்த வேண்டும் உங்கள் படைப்புக்களை தரமற்றதாக அடையாளம் காட்ட வேண்டும் என்று இந்தப் பெண்கள் பல அண்ட கிரவுண் வேலைகளைச் செய்து வருகின்றார்கள் என்று அவர்களுடனும் என்னுடனும் பழகும் பலர் என்னை எச்சரித்துள்ளார்கள். (இவர்கள் எனக்கு ஜூஜூபீ)
என் படைப்புக்கள் காலச்சுவடு உயிர்மை உயிர்நிழல் எக்சில் போன்ற சஞ்சிகைகளிலும் இன்னும் மாலதி மைத்ரேயி தொகுத்த பெண்களின் கவிதைத் தொகுதியிலும் வெளிவந்திருக்கின்றன. நான் இயக்கிய குறும்படங்கள் பரிசைப் பெற்றுள்ளன. கடந்த வருடம் லண்டனில் இடம் பெற்ற குறும்பட விழாவில் எனக்கு சிறந்த நடிகைக்கான பரிசும் கிடைத்திருக்கின்றது. இதை நான் தற்பெருமைக்காகக் கூறவில்லை. தற்போது அதற்கான தேவை வந்து விட்டது. காலச்சுவட்டில் எனது படைப்பு வந்த போது யாருடனோ தகாத உறவு வைத்து எனது படைப்பைக் காலச்சுவட்டில் வெளிவரப் பண்ணியதாக எனக்கே கூசாமல் கூறினார்கள் தம்மை முற்போக்குப் பெண்ணியவாதிகள் என்று பிரகடனம் செய்யும் இவர்கள்.
நிற்க - இந்தப் பெண்களுக்கு அழகான பெண்கள் படித்த நல்ல வேலையில் இருக்கும் பெண்கள் ஆண்களுடன் சகஜமாகப் பழகும் பெண்கள் என்றால் அலர்ஜி. (அழகு என்பது இயற்கையானது. அதை ரசிக்காதவர்கள் உலகில் இல்லை.) உடனே அவர்களை முடிந்தவரை கொச்சைப் படுத்துவார்கள். இலக்கியம் தான் உலகம் என்றும். இலக்கிய அறிவு அற்றவர்கள் மனிதர்கள் இல்லை என்பதும் இவர்கள் முற்போக்குச் சிந்தனையின் கருத்து. (காரணம் இவர்களிடம் கொஞ்ச இலக்கிய அறிவைத் தவிர?? வேறொன்றும் இல்லை)

இவர்கள் என்னைப் பற்றி புலம்பித் திரிவதாகத் தெரிந்தும் நான் அவர்களைக் கண்டு கொள்ளவில்லை. அதற்கு எனக்கு நேரமும் இருக்கவில்லை. இவர்களின் மட்டத்திற்கு இறங்க நான் தயாராகவும் இல்லை. நான் புளொக்கில் கறுப்பி எனும் பெயருடன் எனது தளத்தை அமைத்த போதும் வேறு இடங்களில் எனது பெயருடன் வெளியான கட்டுரைகளை சேர்த்திருந்தேன். எனவே நிச்சயமாக இவர்களுக்கு நான் யார் என்பது தெரியும். இதுதான் சந்தர்ப்பம் என்று மீண்டும் என்னை வம்புக்கிழுக்கும் நோக்கத்துடன் (நேரத்தை எங்காவது பிரயோசனப்படுத்தலாமே) எனது தளத்தில் எழுத நான் அவர்கள் கருத்துக்கு பதில் எழுத விருப்பமில்லை என்பதை ஜாடையில் கூறியிருந்தேன். ஆனால் அவர்கள் விடுவாதாய் இல்லை. அவர்கள் எழுதியதில் இருக்கும் பூடகம் சாதாரணமாக வாசிக்கும் வாசகர்களுக்குப் புரியாது. எனக்கு இவர்களை நன்கு தெரிந்ததால் மீண்டும் கூறினேன் வம்பு வேண்டாம் என்று. எதற்காக என் மேல் இவர்களுக்கு இத்தனை காழ்புணர்வு என்பது தெரியவில்லை. நான் எனக்கான உலகத்தில் என் குடும்பம்ää நண்பர்களுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்கின்றேன். தாம் ஏதோ கொம்பிளெக்ஸால் அவதிப்பட்டால் அதைத் தீர்த்துக் கொள்ள நானா கிடைத்தேன்.
ராஜி ரோசி நீங்கள் முற்போக்கு இலக்கியத்தின் அவதாரங்கள். நான் ஒத்துக் கொள்கின்றேன். தயவுசெய்து என்னை விட்டு விடுங்கள். உங்கள் வம்பு எனக்கு வேண்டாம்.
Please viewes don't ask me any more Qs. you got to understand where I am coming from.

7:22 AM
கறுப்பி said...

கார்த்திக் மீண்டும் சொல்கின்றேன். “மன்மதன்” தரமான படம் என்றோ நல்ல கருத்தை சமூகத்திற்குச் சொல்கின்றது என்றோ நான் கூறவில்லை. ஆனால் பல தமிழ்ப்படங்களை விட வன்முறை குறைந்த திரைப்படம் என்பது என் கருத்து. “மன்மதன்” தவறுசெய்யும்?? பெண்கள் கொலை செய்யப்படுகின்றார்கள். ஆனால் அதை சரியான தீர்ப்பு என்று யார் ஏற்றார்கள். (நான் ஏற்கவில்லை) நாயகன் சொன்னால் போதுமா?
அடுத்துப் பல தமிழ் திரைப்படங்களில் ஒரு பெண் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டாள் அவள் தற்கொலை செய்வது போல்தனே காட்டுகின்றார்கள். இல்லாவிட்டால் தன்னைத் தொட்டவனைத் திருமணம் செய்ய வேண்டும். கதாநாயகி விதவை என்றோ கணவனால் கைவிடப்பட்டவள் என்றோ காட்டி அவள் வாழ்வில் வேறு ஒருவன் வரும் போது எங்கிருந்தோ கதையைச் சோடித்து அவளிற்கு முதலிரவு நடைபெறவில்லை. அவள் சுத்தமானவள். என்றுதானே காட்டுகின்றார்கள். பல ஆண்களுடன் உறவு கொள்ளும் ஒரு பெண் நாயகனால் கொல்லப்படுகின்றாள் என்பதிலும் பார்க்கää ஒரு பெண் தகாத முறையில் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டால் அவளைத் தற்கொலை செய்வதாகக் காட்டிää எம் சமூகத்தில் வாழும் பெண்களில் ஒருவருக்கு அப்படி ஒரு சம்பவம் நடக்கும் பட்சத்தில் அவளைக் குற்றவாளியாகவல்லவா உணர வைக்கின்றார்கள்.
கனடாவிலேயே ஒரு உண்மைச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. ஒரு பெண்ணிற்கு திருமணம் நிச்சயமான போது அவள் தனக்குத் திருமணம் வேண்டாம் என்று அழுது கேட்டபோதும் பெற்றோர்கள் அவள் உள் உணர்வைப் புரிந்து கொள்ளவில்லை. திருமணநாளுக்கு சிலநாட்களுக்கு முன்பு அவள் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டாள். அதன் பின்னர் தான் சில தகவல்கள் பெற்றோரிற்குக் கிடைத்தது. அவளை கனடா அழைத்து வந்த மனிதர் அவளின் விருப்பமின்றி வெருட்டி பாலியல் உறவிற்கு ஈடுபடுத்தியிருக்கின்றார் என்று இதனால் அப்பெண் தான் திருமண வாழ்விற்கு உகந்தவள் இல்லை என்று நம்பி விட்டாள்.
கொலை என்பதிலும் பார்க்க சைகலொஜிக்கலா ஒருத்தரைப் பாதிப்பதல்லவா மிகவும் கொடூரமானது? இப்படியாக எத்தனை திரைப்படங்கள் வந்து விட்டன.

8:15 AM
நிருபா said...

கறுப்பி!
பெண்கள் பல வழிகளில் பாதிப்பிற்குள்ளாகின்றனர். உளவியல் உடலியல் மற்றும் மொழி ரீதியாக என்று சொல்லிக்கொண்டே போகலாம்.....இது உங்களுக்குத் தெரியாததல்லää பெண்களை நல்லவன் என்று நம்பவைத்து பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்வது. அல்லது பெண்களை பாலியல் வன்முறை செய்து விட்டு கொல்லாமல் விட்டுவிடுவது. இதற்கூடாக தொடர்ந்து உளவியற் சித்திரவதைக்கு உள்ளாக்குவதுää அல்லது இந்தப் பெண்களின் உள்ளுணர்வுகள் விளங்கிக்கொள்ளப்படாமல் திருமணம் செய்து வைக்க முனைந்து அவர்களைச் சாகடிக்கச்செய்வதுää அல்லது பாலியல் வன்முறை என்கின்ற கொடுமை நடந்தபின்னும் அதுபற்றிப் பேசமுடியாமல் அவர்களை தினம் தினம் உயிருடன் சாகடிப்பது. இன்னும் இன்னும்…. இந்தக் கொடுமைகளில் எது குறைந்தது கூடியது என்று விவாதிப்போமானால் அது கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு மேலும் நாம் செய்யும் மிகப் பெரிய கொடுமையாக அமையும்.(பெண்பாவம் சும்மாவிடாது) மன்மதனில் பெண்களை மோசமாகக் காட்டிக் கொல்லுவது ஒரு விடயமாக இருக்கிறது. இரண்டாவது தமது விருப்பமில்லாத விடயங்களை(இங்கு ஏமாற்றுவது-வேறு ஒருவருடன் உறவு கொள்வது) தம்மை மீறிச் செய்யும்போது அதை கொலை என்கின்ற ஒன்றினூடாக தீர்க்கமுயல்வது. இணர்டாவது விடயம் பெண் என்பதாக மட்டும் பார்க்கப்படாமல் மனிதர்கள் என்று பொதுப்படையாக பார்ப்பதுவே பொருந்தும். ஏனெனில் இன்நிலைமை ஆண்களுக்கு ஏற்படினும் ஏற்றுக்கொள்ள முடியாது. „சொன்னாக் கேட்குதுகளில்லை“ என்று சிறு பிள்ளைகளை அடித்து வன்முறை செய்வதிலிருந்து இது தொடங்குகின்றது.

12:08 PM
ஒரு பொடிச்சி said...

“…என்று மீண்டும் என்னை வம்புக்கிழுக்கும் நோக்கத்துடன் (நேரத்தை எங்காவது பிரயோசனப்படுத்தலாமே) எனது தளத்தில் எழுத நான் அவர்கள் கருத்துக்கு பதில் எழுத விருப்பமில்லை என்பதை ஜாடையில் கூறியிருந்தேன். ஆனால் அவர்கள் விடுவாதாய் இல்லை. அவர்கள் எழுதியதில் இருக்கும் பூடகம் சாதாரணமாக வாசிக்கும் வாசகர்களுக்குப் புரியாது. எனக்கு இவர்களை நன்கு தெரிந்ததால் மீண்டும் கூறினேன் வம்பு வேண்டாம் என்று.”
-Karuppi

இந்த விமர்சனம் என்னைப் பற்றியதாக ‘இருக்கலாம்’ என்கிற அடிப்படையில் இதுகுறித்த எனது அபிப்பிராயத்தை –தரவேண்டியதன் கட்டாயம் கருதி- இங்கே பதிகிறேன். இது எனக்காக ‘இருக்கலாம்’ என நான் ‘ஊகிக்க’ காரணங்கள்:
(1) உங்களது தளத்தில் எழுதிwவள் என்கிற அடிப்படையில், நீங்கள் 'சாடைமாடையாக' கூறியது “Podichi - No comments for you“ ஆக இருக்கும்பட்சத்தில் (அதைப் பற்றிய எனது எண்ணம்: நான் எழுதியதற்கு நீங்கள் என்ன பதில் எழுதிவிடமுடியும்?! ஓன்றில்- எதிர்ப்பது இரண்டு- அது உண்மை என்பதை ஏற்றுக்கொள்வது 3 –clever ஆய் no comments என்பது. நீங்கள் மூன்றாவதைச் செய்தீர்கள்! இதைவிட பதில் எனக்கென்ன வேணும்?!) இது என்னைப் பற்றியதாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இந்த ‘இருக்கலாம’ ‘வாய்ப்பிருக்கிறது’ இவைக்குக் கீழே பேச/விவாதிக்க எனக்கு ஆர்வமில்லைத்தான். அதனால்தான் மனுஷ்யபுத்திரன் தளத்தில் ஒருவர் நான்-பெயரிலி-தோழன் இன்ன பிற பலர் எல்லாம் ஒன்று என்று போட்டது தொடர்பாயும் என்ன எழுதுவதென்று எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. மேலோட்டமான பார்வையாளர்களுக்கு எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் என்னில் பெயரிலியும் நான் பெயரிலியிலும் முரண்படுகிற பக்கங்கள் இருக்கலாம். மேலோட்டமான பார்வையாளர்களுக்கு அவை குறித்து அக்கறையில்லை. ஒன்றும் ஒன்றும் ரெண்டு என்றுவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். Guess பண்ணுவதில்தான் அவர்களது ஆர்வம்!

(2) நேசகுமார் = சூர்யா பற்றி எழுதிய (நீங்கள் சகோதரிகள் என குறிப்பிட்டிருக்கிறீர்கள்) ‘பெண்’ (இணையத்தில்) நான்தான். இது என்னைக் குறித்ததுஎன்றால் அதை எழுதுவதை விடுத்து இது என்ன விதமான தாக்குதல்?

இந்த உங்களுடைய கிசுகிசுப் பாணி எழுத்து ‘ஊகங்களை’ கிளப்பவே வாய்ப்புத் தருகிறது. மாறாய் நீங்கள் எழுதுகிறவர்களுக்கு எந்த நியாயத்தையும் செய்யவில்லை. நீங்கள் விரும்பியமாதிரி அவர்களை ‘புனைய’ இவைகள் கதை இல்லை. என்ன செய்வது? அவர்களுக்கு உயிரும், முகமும் கருத்தும் இருக்கிறது.

நான் புனைபெயரில் எழுதுவது தொடர்பாய் இங்கேயே எழுதிவிடுவதில் எனக்கொன்றும் கஸ்ரமில்லை (ஒரு புனைபெயரில் எழுதுகிறேன் என்பதன் அர்த்தம் அநாமதேயம் எல்லாம் 'நான்' என்பதல்ல). நான் ‘யார்’ என்பது இணைய வாசகர்களைப்பொறுத்தவரை அநாமதேயம்தான். எனது பெயர் இந்த இணையத்தில் அத்தனை ‘பிரபலம்’ இல்லை! நான் ‘என்ன’ சொல்கிறேன் என்பதே எனக்கு முக்கியம். அத்தோடு எனது ஒவ்வொரு கருத்துக்கும் 100வீதம் அதற்கு மேலவும் நான் பொறுப்பெடுத்துக்கொள்வேன் (செயமோகன் மீது நான் வைத்த விமர்சனம் அவர் 'பொறுப்பெடுக்க மாட்டார்' என்பதன் அடிப்படையிலேயே). ஆகையால் செயமோகன் பற்றி இன்ன பிறர் பற்றி நான் எழுதுகிற விமர்சனத்திற்கும் நான் நிச்சயம் பொறுப்பெடுத்துக்கொள்வேன். தனியே செயமோகனோடு மட்டும் என் தனிப்பட்ட 'காழ்ப்புணர்ச்சியை' காட்டவில்லை. சேரன் பற்றியும் எழுதியுள்ளேன். அவரில் எனக்கென்ன காழ்ப்புணர்ச்சி இருக்க முடியும்! இந்த முக்கிய பொதுநபர்கள் கட்டுடைக்கப்படவேண்டியவர்கள் எனப்து என் கருத்து. அத்தோடு அவர்களைப் பற்றி எல்லாம் எழுத நான் மற்றவர்களிடம் அனுமதி கேட்கவேண்டுமா என்ன? எனக்கு கருத்து இருக்கிறது, அவர்களிடமும் ஒன்று, அதனுடன் முரண்பாடு. அவரது புத்தகத்தை எடுத்தவுடன் ஆ என்று கனங் கருதி பிரமித்து உட்கார்ந்துவிட நிறையப் பேர் இருப்பதால் நான் அவரைப் பற்றி முரண்படுகிறவற்றை எழுத நினைக்கிறேன் 'ஜால்ரா' அடிக்காமல். அதற்காக விமர்சனம் எழுதி முடிய, 'அவரை நிராகரியுங்கள்' என அறைகூவல் விடவில்லை. In fact, செயமோகனது சில சிறுகதைகள், சில கவனங்கள் (observations) எனக்குப் பிடித்துத்தான் இருக்கிறது (அவரை விமர்சிக்கையில் 'அவரைப் பிடிக்கும் ஆனால்' என எழுதவேண்டியது தமிழ் சூழலின் கட்டாயமா என்ன?).

ஒருவரைப் புகழந்து எழுதாதபட்சத்தே, விமர்சனங்கள் 'தனிப்ப்ட்ட காழ்ப்புணர்சி' யாகத்தான் இருக்க வேண்டடியிருப்பது சூழலின் அவலம். அது என்னுடைய பிரச்சினையில்லை.



நீங்கள் தெளிவுறுத்துங்கள்!

முக்கியமான உங்களுக்கு தனிப்பட்டரீதியாக 'அநாமதேயமாக' எழுதிய மெயில்களை எனது தலையில் போடுவது குறித்து மறுப்புத் தெரிவிக்க, இது என் பற்றியதா என்பதை இங்கு நீங்கள் எழுதுவது அவசியமாகிறது. அதுதான் 'குற்றஞ்சாட்டப்பட்டவர்மீதான' குறைந்தபட்ச அவர் தரப்பு வாதத்ததைத் தர ஏதுவாக இருக்கும். அல்லது அவர்கள் தம் தரப்பைத் தரவே கூடாதா?!

நான் என்று சொல்வீர்களென்றால் இப்போதே (அது குறித்து) பதிலையும் தந்துவிடுகிறேன். யாருடைய பாலியல் தேர்வும், அவர்கள் யாருடன் தொடர்பில் உள்ளார்கள் என்பதும் எனக்கு சுவாரசியம் தருகிற விடயங்கள் அல்ல (சுவாரசியம் தந்தால் நல்லம்தான்; ஆனால் இல்லை). "எல்லோருடைய அலமாரிகளுக்குள்ளும் எலும்புக்கூடுகள் இருக்கின்றன." இது அரசியலிலும் பொருந்தும் மற்றவர்களுடைய அந்தரங்கத்தை பார்க்கநினைப்பதற்கும் பொருந்தும். ஆதலால் உங்களுடன் அந்த சேட்டை செய்பவர்களுடைய தொப்பிகளை மற்றவர்களுக்குத் தராதீர்கள்.


ஒரு பெண்ணாய். இன்றைய கணம், நிறைய விடயங்களை எழுத (நிச்சயம் கறுப்பியைப் பற்றி/கறுப்பியின் படைப்புகள் பற்றியோ அல்ல) ‘ஒரு பொடிச்சி’ என்கிற அடையாளம் எனக்கு ‘வசதி’ யாய் இருக்கிறது. நான் கடந்த வருட இறுதியில் இந்த பிளாக்கை தொடங்கியபோது கூட இதையே தெரிவித்திருந்தேன். நான் ‘நேரத்தை பிரயோசனமாக செலவளிக்கவே’ அதை தொடங்கினேன். நீங்கள் குற்றஞ்சாட்டும் நபர் 'நானாக' இரந்தால் உங்களை வசைபாடும் ஒரே நோக்குடன் நான் அதைத் தொடங்கியதாய் ஆகிறது! என்ன கொடுமை! ஒருவருக்கு இதுவே ஒரு வேலையாக இருக்க முடியுமா?! உங்களை நேரடியாவோ மறைமுகமாவோ நான் இதுவரை ‘குட்டு’ வைக்கவுமில்லை, இனியும் செய்யப்போவதில்லை (இதற்கு மாறாய், ஏதும் இருந்தால் அறியத் தாருங்கள் - 'ஒரு பொடிச்சி' எனப் போட்டு அது குறித்து 'பகிரங்கப்படுத்தி' எழுதுங்கள்). . .நான் 'கடந்து போகிறபோது' மெட்டி ஒலி' பார்ப்பது குறித்தும், (புரியாதவர்கள் எனது பதிவு அந்த இன்னொரு பெண்ணைப் பற்றி... -6- பார்த்துக்கொள்ளுங்கள்) நான் 'விமர்சித்தபடியே' செயமோகன் படிப்பதுப்றறியும் உங்களுக்கத்தான் ஆகவில்லையோ என்று பட்டது! (நான் மெட்டிலி ஒலி கடந்து போகாமல் இருந்துதான் ஆரம்பத்தில் பார்த்தேன். பிறகு அவர்கள் இழுக்கத் தொடங்கியதும் நேரமின்மை காரணமாக பார்ப்பதில்லை. மற்றப்படி அதற்கொன்றும் இல்லை. நான் என்னை intellectual என்று எழுதுவதைக் கூடவா நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டீர்க்ள?! எனது நகைச்சுவை உணர்வு குறித்து மிகவும் மட்டமாக உணர்கிறேன்)
If you didn't mean them, then forget these! Maybe I am 'imagining' as well!

உங்கள் போன்ற ஆள் ‘பிரயோசனமாய் செலவளிக்க’ சொன்னபிறகு எனது நேரத்தை இங்கு மினக்கெடுத்துவதில் எனக்கும் ஆசை இல்லைத்தான். ஆனால் இதை பார்க்கிற ‘புரியாத’ நபர்கள் கொடுப்புக்குள் சிரித்துக்கொள்வதிலும் 'ஒரு சுவாரசியம் தரும்' விடுப்புப் பார்ப்பதிலும் எனக்கு fun இல்லை.
ஆனால் என்னைப் பற்றியதாக இருக்கும்பட்சத்தில் அதை 'மௌனமாய்' எதிர்கொள்ள நான் நீங்கள் பிரேரிக்கிற மனிதர்களின் ஒருவள் அல்லாததால் இந்தப் பதில்.


அத்தோடு இந்த ராஜி என்கிற நபர் ஒரு பெண் என்று எழுதியது நீங்கள்தான். அவர் ஆணாகக் கூட இருக்கலாம் எனவே நான் நினைக்கிறேன். அவரிடம் நேர்மை இருக்குமானால் இத்தகைய உங்களுடைய ‘புனைவுக்கு’ அவர் வந்து பதில் சொல்லியிருப்பார். ஆனால் இதுவரை ஏன் ஒரு பதிலில்லை? ராஜி என எழுதப்பட்டிருப்பது ‘ஒரு பொடிச்சி’ எழுதுவதுபோலவே இருக்கவேண்டுமென ‘உள்நோக்கத்துடன்’ எழுதப்பட்டிருக்குமானால் அதை நான் கண்டிக்கிறேன். அவர் வந்து தன்னுடைய பக்கத்தை கூறவேண்டும். அதன்பின்பு நீங்கள் என்ன செய்வீர்கள்? மன்னிப்பு? மற்றவர்களுடைய பிறப்புப் பற்றி வசையாடுகிற உங்களிடம் நான் அதை எதிர்பார்க்கவில்லை.

ஆனால் நான் ராஜியும் இல்லை. ஒரு அநாமதேய நபரும் அல்ல. 'ஒரு பொடிச்சி' என்று உங்களுடைய பதிவொன்றில் பின்னுட்டமிட்டது மாத்திரமே நான். இந்த அடிப்படையில் நீங்கள் தெளிவுறுத்துங்கள். இங்கிருப்பவர்களை எப்படிப்பட்ட -வன்முறையை தூண்டாத- பாடல் கேட்கவேண்டும் (ஆனால் படம் பர்க்கலாம்!) என பரிந்துரை செய்கிற நீங்கள், சனநாயக முறையில் நபர்களை அடையாளங் காட்டுங்கள். பிறகு பேசுவோம்.

5:03 PM
raji said...

கறுப்பிக்கும் பொடிச்சிக்கும் ராஜி ஆகிய எனது பதில்.
நான் மதியம் 2 மணியளவில் தான் கறுப்பியின் பதிவைப் பார்த்தேன். உடனடியகாப் பதில் எழுதாதிற்கு உள்நோக்கம் எதுவும் இல்லை. எனது நேரம்தான் பிரச்சனை. எனது குழந்தைகளை பாடசாலையில் இருந்து ஏற்றிவந்து சங்கீத வகுப்பு(களுக்கு) கொண்டுபோய் விட்டுவிட்டு முடியும் வரை உறவினர் ஒருவரின் வீட்டில் இருந்துவிட்டு பிறகு பிள்ளைகளை வீட்;டிற்கு ஏற்றிவந்துää அவர்களின் பாடுபார்த்து பின் மெட்டிஓலி பார்த்து விட்டு ‘செல்வி’ தொடங்கவும 11.00 (பி.இ) அதை விட்டுவிட்டு கணணிக்கு வந்தால் பெட்டையின் என்பற்றிய சந்தேகம் பிரசுரமாகியிருந்தது. ஆகவே ‘பெட்டை’ அவர்களே இப்போது உங்குகளுக்கு என் காலதாமதத்தால் என் நேர்மைமீது வந்த சந்தேகம் போயிருக்கும் என நம்புகிறேன். அதைவிட உங்களைப் போல நான் எழுதினேன் என்பதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை. ஜெயமோகனை யாரும் விமர்சிக்கலாம் தானே.

சரி இனி கறுப்பியிடம் வருவோம்:

நீங்கள் கூறிய பெயரில் எனக்கு சகோதரி யாரும் கிடையாது. நான் உங்களுக்கு பழைய நண்பியும்; கிடையாது. உங்கள் அறிவுக்கு பதில் தரமுடிந்திருந்தால் நீங்கள் முதலில் பதிலைத் தந்திருக்கவேண்டும். பின்புதான் மற்றய உங்கள் சந்தேகம்களைப் பற்றிப் பேசியிருக்க வேண்டும். அதைவிடுத்து அந்த சகோதரிகளை இழுத்து தரக்குறைவாகப் பேசியது சுத்த அனாகரிகமானது. விமர்சனத்துக்கு முகம்கொடுக்க திராணியற்று விமர்சனத்தையே பத்தியிலிருந்து நீக்கிய நீங்கள் இலக்கியத்தில் பெரிதாக சாதித்ததாக சொல்வது சுத்த அபத்தம். மானிசியபுத்திரனின்ää பெயரிலி ஆகியோர் சம்மந்தப்பட்;ட அண்மைய விவாதத்தைப் பார்த்தால் விமர்சனத்தை எப்படி எதிர்கொள்வது என்பதை அறிவீரகள். அதைவிடுத்து விருதுகளை வைத்து ஒருவரின் திறமையை அளவிடுவதாயின் தமிழர்தகவல் திருச்செல்வத்திடமும்ää தமிழன் வழிகாட்டி செந்தியிடமும் தாரளமாக விருது வாங்கலாம். நீங்கள் குறிப்பிட்ட சகோதரிகளுக்கு என்னைத் தெரியாவிடினும் எனக்கு அவர்களை ஓரளவு தெரியும். அதனால்தான் சொல்கிறேன் அவர்கள் விடுதலைப் பாடலுக்கு வக்காலத்து வாங்க இவளவு அக்கறையாக வருவார்கள் என நான் நினைக்கவில்லை. உங்களுக்கும் இது புரிந்திரு;க வேண்டும். மீண்டும் சொல்கிறேன் (எச்சரிக்கிறேன்) உங்களை விட உயரமான விடயங்களில் தலையை விடாதீர்கள.;;

பி.கு: சகோதரிகளை வம்புக்கிளுத்து அனாகரிகமாக கதைத்ததிலிருந்து அவர்களுக்கும் உங்களுக்குமான மோதலில் உங்கள் பக்க நியாயம் எப்பிடியிருக்கும் இருக்கும் என்பதை வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியுமென்று நினைக்கிறேன.

9:27 PM
வசந்தன் said...

அன்பின் கறுப்பி, விவாதமென்று வந்தபின் சிலவற்றை முகங்கொடுத்துத்தான் ஆகவேண்டும். இப்பதிவில்
//"றாஜி! கோவிக்கக் கூடாது, உங்களிட்ட ஒரு கேள்வி. இதே பின்னூட்டத்தைத் தான் முன்பும் இட்டிருந்தீர்களா? இல்லை சிறு திருத்தங்களேதும் செய்தீர்களா? ஏனென்றால் இந்தப்பின்னூட்டத்திற்கா கறுப்பி பிறப்புப் பற்றியும் நாகரிகம் பற்றியும் கூறினார் என்பது சந்தேகமாயுள்ளது. அதுதான் கேட்டனான்."//
என்று நான் கேட்ட கேள்விக்கு றாஜி அளித்திருந்த பதிலை ஏன் நீங்கள் அழித்தீர்கள்? அக்கேள்விக்கான றாஜியின் பதில் ஏனையவர்களுக்குத் தெரியாமற் போய்விட்டது. இதை மறைக்க முயல்வதின் நோக்கம் என்ன? இந்தப்பதிவில் மட்டுமல்லாது அடுத்த பதிவில் இட்டிருந்த இரு பின்னூட்டங்களையும் அழித்து விட்டீர்கள். அவற்றை நீக்கியதன் மூலம் நான் அவரைக்கேட்ட கேள்விக்கும் அர்த்தமில்லாமற்போய் விட்டது. றாஜி என்ன சொன்னார் என்பது மறைக்கப்பட்டுவிட்ட நிலையில் உங்களின் "அவர்கள்" பற்றிய பதிவு வெறும் பூச்சாண்டிதான். மானுஷ்ய புத்திரனை உதாரணப்படுத்தும் நீங்கள் அவர் செய்தது போல அவ் அநாமதேயப் பின்னூட்டத்தை நீக்காமல் விட்டிருக்கலாமே. அநாமதேயத்தைப்பற்றிச் சொன்ன நீங்கள் பின் பெயரோடு வந்து எழுதிய றாஜியின் பின்னூட்டங்கள் அனைத்தையும் ஏன் நீக்கவேண்டும். இதற்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக என்னுடைய பின்னூட்டத்தையும் நீக்குவீர்களா? தயவு செய்து விளக்குவீர்களா?

9:37 PM
ஒரு பொடிச்சி said...

உங்களுடைய பதிலே நிறைவாய் இருக்கிறது. நான் 'என்னைப்போல' எழுதியது என எழுதியது 'ஒத்த கருத்துக்களைத்தான்'.
வேறொன்றுமில்லை.
மிக்க நன்றி. உங்கள் நேர்மைக்கு.


Free Web Page Hit Counters
lasik uk