பயம்
எம்மிடையே மார்க்சியர்கள்/இடது/முற்போக்காளர்கள் என தம்மைக் குறிப்பிட்டுக்கொள்பவர்கள் பலரும் தாங்கள் அப்படி ஒரு பட்டத்தைத் தமக்கு தந்திருப்பதாலேயே பெண்களது பிரச்சினை குறித்து, பிற தம்மால் 'அனுபவித்தறிய' இயலாத மனிதர்களின் பிரச்சினைகுறித்து 'புரிந்துகொண்டேன் பேர்வழிகள்' என (ஒரு --ஐயும் புரியாமல்) இருப்பதைக் காணலாம். இது புதிய ஒன்று அல்ல.
இங்கே குஷ்பு சார்ந்த, பதிவுகள் படித்தபோது, "நாங்கள் இன்னஇன்ன இயர்களாக (மார்ச்சியர், பெரியாரிய, வட் எவர்!) இருப்பதால், படுபிற்போக்குத்தனமாக கருத்துக்களை காவுபவர்களாக இருக்கமாட்டோம்" எனகிற அசாத்திய நம்பிக்கையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
இங்கே, ஒரு கட்சியாய் குறிப்பிட்ட கொள்கைகளின் கீழ் இணைந்திருக்கிறபோது, தனிநபர்களின் 'உயரிய' சிந்தனைகள் அடிபட்டுபோய்விடும்; ஆனா இங்க வந்து வலைப்பதியிற கட்சி சாராத அக் கொள்கைகள்சார் தனிநபர்கள், தான் இன்னஇயன் என என்ன யம்பிங் விட்டாலும், அது முடிய, என்ன சொல்கிறார்கள் என்பதே பொருட்டு என்பதை அடிக்கடி நினைவுபடுத்தவேண்டி இருக்கிறது.
திண்ணையில் படைக்கப்படுகிற சின்னக்கருப்பன் போன்றவர்களது பிற்போக்குத்தனங்களைவிட ---அறிவியல்,நவீன இலக்கியம் என பரிச்சயமுடைய நபர்களின் மரபான பயத்தை (அதைத் தவிர வேறொன்றுமில்லை) த்தான் மிக ஆச்சரியமாகப் பார்க்க முடிகிறது.
குஷ்புவினது பேட்டியைப் பார்த்து 'இளம் யுவதிகள்' (இளைஞர்கள அல்ல!) , 'கெட்டு'ப்போய்விடுவார்கள் என்றும், குஸ்பு (திருமணத்திற்கு முன்பு வைத்திருக்கிறபோது) உரிய தற்காப்புகளுடன் உறவு வைத்துக்கொள்ள சொன்னதற்கு, 'செய்த (செக்ஸ்) தவறிற்கான பின்விளைவை' அனுபவிக்கத்தானே வேணும் என்கிறரீதியில் சொன்னது தனியே டோண்டு ராகவன் போன்றவர்கள் அல்ல. In fact, டோண்டு ராகவன் - அவர் நிச்சயம் அப்படிச் சொல்ல மாட்டார்! வேதங்களில் உள்ள பெண்ணடிமைத்தனத்தைப் பேச மாட்டாரே தவிர பெண்கள் குறித்து அவர் வைத்திருக்கிற கருத்துக்கள் இங்கே/எங்கேயும் எழுதுகிற பல 'சிவப்புக்கட்சி/பெரியார்' சார்பு அறிவியலாளர்களை விட உயர்ந்ததே. அதை 'அவர்' சொல்வதால் 'சந்தேகத்துடனும்' 'நேர்மையற்ற'தாகவும் 'சந்தர்ப்பவசமான'தாகவும் பார்க்க விழைகிற பலருக்கு தமது பின்னோக்கிய, மரபார்ந்த பயத்தை, ஒத்துக்கொள்ளும் நேர்மை கிடையாது.
பிற்போக்கான மற்றவர்களைப் பார்த்து 'சிரிப்பு வருகிறது' என்று அத்தகையவர்களது நகைச்சுவையுணர்வில் புளகாங்கிதமும் தவறாது அடைந்து போகிறவர்கள், தம்மை மறுபரிசீலனை செய்யத் தயராய் இருக்க வேண்டும். அது இல்லாதவர்கள் பலராகத்தான் அறிவுத்துறை ஆண்கள் எங்கயும் இருக்கிறார்கள்.
குஷ்பு வின் 'அதீதமான' கோபத்தையும் 'அதிகமாகக் கூவியதை'யும் இந்த 'அரசியல்'இற்கான காரணத்தைக்கூறி ''பெண்களே நீங்கள் இதை உங்களுக்கெதிரானதாக நினைக்கக்கூடாது'' என்பவர்கள், பயத்துடன் பதிவுகளிற்கு மேல பதிவும் -குஷ்பு சொன்னதைப் படிக்க முன்னரேயே- , பத்திரிகைகளில் பரப்புரையும் செய்பவர்கள் அவர்களை ஒத்த ஆட்களே. எதற்காக பெண்கள் இதை ஒரு அரசியலென புரிந்துகொள்ளவேண்டும். தம்மை அவமதிக்கிற, உள்ளடக்காத ஒரு சாமானை அவர்கள் ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும்?
இந்தியா டுடெயில், குஷ்பு சொன்னதில் எதில் எதில் முரண்படுகிறார்கள் எல்லாரும்? குஷ்பு சொன்ன என்ன விடயம் "பிரச்சினைக்குரியது" "முரண்பாடானது" என்பதை வெளிநாட்டிலிருக்கிற முற்போக்காளர்கள் -குஷ்புவின் அந்த ஒரு பக்கக் கட்டுரையிலிருந்து மேற்கோள் காட்டி- விளக்கிக் கூறலாம். அந்த ஒருபக்க விளம்பலில் இருந்து எடுத்துப் போடுவது சிரமமான காரியங் கிடையாது. அதை செய்தால் உங்களது பயங்களின் நிலவரம் எந்த மட்டில இருக்கிறதென்பது தெரிய வரலாம்.
குஷ்பு சொன்னதைப் படிக்காமலே ஒவ்வருவரும் எழுதிய கருத்துக்கள் + குஷ்புவினது அந்த சிறு கட்டுரையில், பாலியல் சுதந்திரம் போன்றன எங்கே பேசப்பட்டன என்பதையும் யோசிக்கிறேன்.
"இந்தியா டுடெயில் இப்படிச் சொல்லுகிறவர் தன்னை விபச்சாரி என்றதற்கு முதல் ஏன் கூவினார்" என்றும் சிலர் திருவாய் மலர்ந்திருக்கிறார்கள். 'விழுந்தடித்துக்கொண்டு' பதிவதில் என்ன சொல்கிறார்கள் என்று அவர்களுக்கு புரிகிறதா என்ன?!
குஸ்பு என்ன பெண்ணிலைவாதியா, அவர் ஏதும் செய்திருக்கிறாரா, என்கிறரீதியில் கேடகிறாகள்.
செக்ஸ் பற்றிக் கருத்து சொல்ல குஸ்பு ஏன் பெண்ணிலைவாதியாய் இருக்கவேண்டும்? அவர் குங்குமம், தாலி, மெட்டி போட்டிருந்தா என்ன? - தெரியவில்லை.
//படித்தவர்கள் தாங்கள் திருமணம் செய்யப் போகும் பெண்ணின் ‘கன்னித்தன்மை’ பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்//
கட்டுரையிலிருந்து இந்த வரி (கட்டுரையிலில்லாத பல வரிகளைப்போலவே)நிறைய அர்த்தங்களைப் பலருக்கும் தந்துவிட்டது, நியோ என்பவர் எழுதிறார்:
1. * படித்தவர்கள் தாங்கள் திருமணம் செய்யப் போகும் பெண்ணின் ‘கன்னித்தன்மை’ பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்
HUHHHHH!!!!!! இந்த வாசகத்திலே இருக்கிற sweeping nature எத்தனை விசயங்களை பிறழ முன்மொழிகிறது என்று சொல்லத் தேவையில்லை!
2. * இப்பொதெல்லாம் pre-marital sex கொள்லாத பெண்கள் இருக்கிறார்களா என்ன?
jeez! What the *%%&%^
யார் இவருக்கு இந்த அதிகாரமளித்தது - சமூகம் பற்றிய தன் கருத்தை இத்தனை பொறுப்பில்லாமல் சொல்வதற்கு?
இதுதான் என்னுடைய எதிர்வினை! அதாவது இந்த வார்த்தைகளை குஷ்பூ இதே விதமாகச் சொல்லியிருக்கும் பட்சத்தில்.
--------------------------------------------------------------------------
இதில பொறுப்பில்லாத தனம் என்ன இருக்கு? குஸ்பு எதே விதமாய் சொன்னார் என்பதே படிக்காமல், அப்படிக் கேள்விப்பட்ட உடனேயே ஒரு ஆண் பதறிப்போய் (அந்தத் தனது பதறலை ஒத்துக்கொள்ளாமல், அதை 'சமூகம்' பற்றிய கூற்றாக திரித்து), தன் பெண்களைப் பற்றி பயம் கொள்கிற ஒரு சமூகம் இல்லாதுபோனால் அத்தகைய வாசகங்களில் இருக்கிற sweeping nature இற்கு என்ன ஆகும்?
"திருமணத்திற்கு முன்னால் உறவு கொள்ளாத பெண்கள் இருக்கிறார்களா என்ன" என்கிற கேள்வி குறித்த மேற்குறிப்பிட்ட எதிர்வினை, கற்பு என்கிற கருத்துருவாக்கத்தை இழக்க விரும்பாத ஒரு சமூக ஆண் தனிநபர(ர்கள)து குரலன்றி வேறென்ன? இங்கே இந்த விசயத்திற்கு துள்ள வேண்டிய அவசியம் என்ன? பெண்கள் pre-marital sex கொள்லாதவர்கள், இருக்கலாம், இல்லாமலிருக்கலாம், குஸ்பு, அதை இப்படிச் சொன்னால், அதனால் என்ன அழிந்துவிடும்?
உண்மையில் இவர் தனது கவலை சமூகத்தைப் பற்றி குஸ்பு சொல்கிற கருத்தென நம்புகிறார்.
தொடர்ந்தும் சப்பைக்கட்டுக்கட்டிக்கொண்டிருக்க இவர்களுக்கு, -பயம் போன்றே-ஆண் என்கிற தனது இன/சாதி என்கிற அரசியற் காரணங்கள் இருக்கலாம். இங்கே குஷ்புவை அழ அழ மன்னிப்புக்கேட்கச் செய்த ஆதிக்க செயலை தங்கர்பச்சன் மன்னிப்புக் கேட்டதுபோல ஒன்று என நினைப்வர்கள் அதைத்தான் தெரிவிக்கிறார்கள்.. (இதில் 'குஸ்பு மன்னிப்புக்கேட்டது தப்பு'; தன்ர கருத்தில ஸ்றோங்கா நின்றிருக்கணும் எனவெழுதுகிறவர்களையும் குறிப்பிடவேண்டும்.).
இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எல்லாம் நவீன 'அறிவூட்டப்பட்ட' மூளையையுடையவர்களது பிற்போக்கு வாதங்களை சகித்துக்கொள்ளும்தன்மையை வளர்த்துகொள்ள முயலவேண்டி இருக்கிறது. இல்லாவிட்டால் பெண்களை தாம் இழிவாக்கி வைத்திருக்கிற சொல்லாடல்களால், தமது இழிவெண்ணங்களைக் கொட்டித் திட்டுபவர்களிடம் எல்லாம் 'அரசியல் ரீதியாக' மிகச் சரியாகவும், பொறுப்புடனும் பேசும் தன்மையை வளர்த்துக்கொள்ள இயலாது. (இது குறித்து குழலி ஒரு பதிவு போடலாம்; முற்போக்கான பெண்கள் எவ்வளவு கூவலாம், சாதாரண பெண்கள், 'குடும்ப' பெண்கள், நடிகைகள், இதர தொழில் வர்க்கப்பெண்கள் எவ்வளவு இத்தியாதி என ) ...
கற்பு பற்றி 'வெளிப்படையாய்' பயப்படுகிற பிற்போக்குவாதிகளையும்
மறைமுகமாய் அதை வைத்திருக்க விரும்பிற முற்போக்குஇயங்களைக் காவுகிற பிற்போக்குவாதிகளுமான ஆண்கள்,
அவர்களது அரசியல் தலைவர்கள், கொண்ட ஒரு சமூகத்தில் "காலாவதியாகும் கற்பு" என்றொரு தலைப்பில்,
அவங்ககளைப் போன்ற ஒரு ஆளை,
அவங்களுடைய அரசியல் கட்சியை/ அவங்களுடைய சாதியைச் சேர்ந்த ஆணை
நாலுபேருக்கு முன்னால மன்னிப்புக் கேட்கச் செய்தவள், "விபச்சாரி" என்று உன்ர அம்மாட்ட போய் சொல்லு என்றவள், பெண், அதுவும் (இயக்குநர்கள் டிஸ்கஸன் என்ற பெயரில் நடப்பது உலகிற்கே தெரியும் என்கிற 'புரிதலுக்குரிய')
ஒரு 'நடிகை' எழுதினது பெரும் பிரச்சினையே.. (என்ன எழுதினார் என்பதை முழுமையாப் படிக்காவிட்டாலுங் கூட!!!!!!)
0 Comments:
Post a Comment
<< Home