N.Kannan - my view - just for a record
II
- The orignial story by N.kannan: பேசாப்பொருள்
- At 12:50 PM, ஒரு பொடிச்சி said...
-
முதிய ஆண்களின் இளம் பெண்களைப் புணரும் fantasy ஐ சிறுகதை என எழுதியிருக்கிறீர்கள். அதற்குச் சான்றாய் ஒவ்வொருமுறையும் 50 வயது 'அவர்' 'குளித்துவிட்டு வந்தபோது அவருக்கு 10 வயது குறைந்திருந்தது" என இருமுறைக்கு repeat வேறு செய்துள்ளீர்கள். உந்த சாயல் பற்றினது 8 வருடம் முந்தியா? பாலசந்தரின் 'கல்கி' வந்தபோதே விவாதத்திற்கும் மறுப்பிற்கும் உள்ளானது. பாலசந்தர் சொல்கிற 'புரட்சி'கூட தேவலாம்போல இருக்கு. இதில், அந்தக் காலத்து கதையைச் சொல்லிக்கொண்டு 'பின்நவீனத்துவம்' பற்றி வேறா? நான் இன்னமும் 'செந்தட்டி'யை மறக்கவில்லை. அது ஒரு நல்ல படைப்பென்பதால் அல்ல.
- At 2:54 PM, அல்வாசிட்டி.விஜய் said...
-
அய்யகோ!!! தப்புத் தாளங்களாக தான் வந்திருக்கிறது அய்யா. கல்லூரி காலங்களில் படித்த மஞ்சள் புத்தகத்தின் தொனி தான் தொக்கி நிற்கிறது.
- At 5:12 PM, Ramachandranusha said...
-
இந்த கதையில் கண்ணன் என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லை, போலித்தனம் இல்லாத, வாழ்க்கை பெண்ணுக்கு வேண்டும் என்கிறாரா? நேற்றைய காதல்மன்னன் இன்றைய இளவரசன் போல பெண்களும் வாழ வேண்டுமா? அதன் பரிணாமவளர்ச்சியாய் அண்ணாச்சி வகையாறாக்களின் பிறன் மனை நோக்கலும் சரியா? ஆனால் இவர்களுக்கு கடைசிகாலத்தில், சிசுருஷை செய்ய, நவீன நளாயினிகள் கிடைப்பார்கள். தட்டு தடுமாறிய பெண்கள் கதி என்னவாகும் என்பது அனைவரும் அறிந்ததுதானே?
சரோஜா தேவி கதைகள் என்ற செய்தி காதில் விழுந்தவைத்தான், ஆனால் புஷ்பாதங்கதுரை தனமான இத்தகைய கதைகளும், அதற்கு சூப்பர் காம்பினேஷன் ஜெ..., யின் படங்களும்தான் நினைவிற்கு வருகின்றன. இலக்கிய இதழுக்கு அனுப்பலாம் என்பதை வாப்ஸ் வாங்கிக் கொள்ளவா அல்லது இத்தகைய அறிவிஜீவிதனமான, புதுமை நோக்கில் எழுதப்படும் கதைகள் இலக்கிய இதழ்களுக்கு பொருத்தமானவையா?
உஷா - At 5:51 PM, N.Kannan said...
-
உஷா! விட மாட்டீங்க போல :-) சரி அலசுவோம் (வேலை நேரத்திருட்டு, ஆழமாகப் போகமுடியுமா என்று தெரியவில்லை).
எந்தக் கதையிலும் இரண்டு அம்சங்கள் உண்டு. ஒன்று உள்மனம் சார்ந்தது. தனிமனிதத் தேடல் சார்ந்தது. மற்றது, சமூகம் சார்ந்த விழுமியங்கள். அது தனிமனிதன் மேல் விதிக்கும் கட்டுப்பாடுகள்.
பெரும்பாலோரின் கோபம் இக்கதையின் சமூக விளைவுகள் பற்றியே. அவள் சமூகம் தரும் norm-லிருந்து மிக விலகி இருப்பது. அதாவது அவள் எல்லோரும் போல் இல்லாமல் இருப்பது. சமூக ஒழுங்கை நான் குறைத்து மதிப்பிடவில்லை. உங்கள் கோபம் புரிகிறது.
இதில் இரண்டொருவர் மட்டுமே அப்பெண்ணின் அகமனது பற்றி அக்கரை கொண்டுள்ளனர். கதை என்பது ஏதாவது சொல்ல வேண்டுமென்ற நியதி கிடையாது. இங்கு ஒரு பெண்ணின் ஆசைகள் பேசப்படுகிறது. அவள் ஏன் இப்படித்தறி கெட்டுப்போய் ஆசைப்படுகிறாள் என்று கூக்கிரலிட்டு தனிமனித சுதந்திரத்தைப் பறிக்க நம் யாருக்கும் உரிமை இல்லை. இந்திராபார்த்தசாரதி சொல்லுவார் ராஜராஜ சோழன் அவனிடம் தினம் வரும் பரத்தையரிடம் ஒரு existencial விளையாட்டு ஆடுவானாம். அதாவது விஷமிட்ட தின்பண்டத்தை மற்றவைகளுடன் கலந்து அவள் எதை எடுக்கிறாள் என்று பார்ப்பானாம். அது போன்ற விளையாட்டை இவள் ஆடுகிறாள். அதில் ஒரு திரில் உண்டு. அதனாலேயே அவள் சோரம் போகத்துணிகிறாள். அதில் இந்தத் திரில் இருக்கு. வருபவன் யார் என்று தெரியாது, எப்படி நடந்து கொள்வான் என்று தெரியாது. அதை சுகித்துப் பார்ப்பதில் ஒரு அனுபவம். அவளுக்கு இந்த விபரீத ஆசை வரவில்லையெனில் அவள் ஒரு கிளாஸ்மெட்டுடன் படுத்திருப்பாள் (பையன் கூச்சப்படாமலிருந்தால் :-)
அவளுக்குக் கர்பமாக வேண்டுமென்ற ஆவல் இல்லை. ஒரு குழந்தைக்குத் தாயாக வேண்டுமென்ற ஆசையில்லை. அவன் நல்லவனாக இருந்துவிட்டதால் விளையும் ஒரு மன நெகிழ்வை அது காட்டுகிறது. அவள் நிச்சயம் மாத்திரை போட்டுக்கொள்ளும் வகை என்பது சொல்லாமலே புரிபட்டிருக்க வேண்டும்.
இவளின் குணாதிசயம் ஒரு சாதாரண தமிழ் பெண்ணுடன் ஒத்துப்போகவில்லை என்பதை விமர்சனங்கள் காட்டுகின்றன. இதை ஒரு ஜெர்மன் பெண் செய்யமுடியும். அப்போது இது ஒரு பிரச்சனை இல்லையா? எது நம்மை இந்தப் பாடு படுத்துகிறது. Is it our social conditioning? Our own judgement of life and morals?
செக்ஸ் பற்றிப் பேசினாலே உடனே முத்திரை குத்த ரெடியாக இருந்தால் எழுதவே முடியாது. பேசவே முடியாது. நான் புஷ்பா தங்கதுரையும் படித்ததில்லை, சரோஜாதேவியோ? அவர்கள் கதையெல்லாம் படித்ததில்லை. இது வணிக எழுத்து அல்ல. இது விற்பனைக்காக அல்ல. இதை வெளியிடும் நோக்கமுமில்லை. வலைப்பூவில் வெங்கட் எழுதின சமாச்சாரத்தைப் பார்த்துவிட்டு வந்த தைர்யத்தில் எழுதினேன். இதுவும் நான் வழக்கமாய் சந்திக்கும் உலகம்தான் என்று புரிந்து கொண்டேன்.
செக்ஸ் பற்றி வரும் என் கதைகளை மட்டும் விமர்சிக்கிறார் பொடிச்சி. எத்தனையோ பல நல்ல கதைகளை நான் எழுதியதுண்டு. ஷொட்டுக் கொடுப்பதைவிட முட்டிப்பார்பதிலும் ஒரு திரில் இருக்கத்தானே செய்கிறது:-)
திரும்பத்திரும்பச் சொல்கிறேன். இதைக் கட்டுரையாகக்கூட எழுதியிருக்கலாம். இது பற்றிப் பேசினால் என்ன? நிகழ்வு எப்படியிருக்கும் என்பதே நோக்கம். அலை இன்னும் வீசிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் நான் விட்டாலும் நீங்கள் விடமாட்டீர்கள் போல. எனவே நீங்களே இதற்கொரு சமாதி கட்டி விடுங்கள். இனி என் பொறுப்பல்ல. - At 2:37 AM, ஒரு பொடிச்சி said...
-
சாரே,
"செக்ஸ் பற்றி வரும் என் கதைகளை மட்டும் விமர்சிக்கிறார் பொடிச்சி." என்று ஒரு விமர்சனத்தை வைத்துக்கொண்டு (நான் ஒன்றும் personal ஆய் எடுக்கவில்லை) "...இதை ஜேர்மன் பெண் செய்யமுடியும்" "தமிழர்கள் உணர்ச்சிவசப்படுகிறோம" என்கிறீர்கள்! இந்த உங்கள் mentality இன் முரண் உங்களுக்குத் தெரியாட்டிலும் படிப்பவர்களாவது அறிந்துகொள்க!!
For your information, உங்களுடைய 'உதிர் இலை காலம்' தொகுப்பும் படித்திருக்கிறேன் (அதை 'இலை உதிர் காலம்' எனப்போட்டாலும் ஒன்றுதான் என்பது எனது 'கருத்து'). அந்த அனுபவதில் 'ஷோட்' கொடுக்கும் ஆவல் எல்லாம் இல்லை. 'முட்டிப்' பார்க்கும் 'த்றில்' உம் இல்லை. ஆனால் த்றில் பற்றிய உங்களது கருத்து 'ஊகிக்கக்' கூடியதுதான். ஆச்சரியம் தரவில்லை.
எனது பழைய பின்னூட்டம் கண்ணனென்பவருடைய தனிப்பட்ட கருத்து பற்றியதல்ல. ஒரு புனைவு மற்றும் அதைத் தொடர்ந்த கட்டுரை கொண்டுவருகிற கருத்தியல் பற்றியது. மிகப் பிற்போக்கான ஆணிலைப்பட்ட எழுத்தை தொடர்ந்து எழுதுகிறீர்கள் அதை "பேசாப்பொருள்" எனவும் எழுதுகிறீர்கள். அந்தப் பிரதி குறித்த எனது எதிர்வினை இது. ஆங்கில இலக்கியப் புத்தகங்கள், ஆங்கில seduction புத்தகங்கள் இரண்டும் படித்துள்ளேன். உங்களது எழுத்தில் அவ்வகை ஜுஜுபிகளில் இரண்டாம்வகை பாணிதான் தெரிகிறது. அதைத்தான் எழுதினேன். இதில 'உணர்ச்சிவசப்படவைக்கிற' விசயம் நீங்கள் எழுதுகிற பிரதிகளைப்பற்றி நீங்களே ஒரு (முற்போக்கு)முகம் (பேசாப்பொருள்) தருவதுதான். நீங்கள் எழுதுவதுபோல சொல்வதானால், வணிக எழுத்துக்கள் இல்லை என்று சொல்வதுதான் தவறே ஒழிய, வணிக எழுத்துக்கள் அல்ல! (அப்படி நிங்கள் சொன்னால் இதை நான் எழுதியிருக்கமாட்டேன்).
ஜானகிராமன் போன்றவர்களது போல் அல்லாமல் நிச்சயம் உங்களது வணிக எழுத்துத்தான் (வணிக நூலில் வராததால் அது இல்லை என்பதல்ல). ஜானகிராமனின் பெண்கள் விமர்சனத்துக்குட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். முக்கியமாக அவர்கள் எல்லாரும் 'விடுதலை விரும்பி' என்கிற ஒற்றைச் சொல்லுள் முத்திரை குத்தப்படவில்லை.
இன்னுமொரு தகவல் இன்றைய ஆங்கில வணிக நூல்களில் condom போடுவது சாதாரணமானது (பிற ஐரோப்பிய நூல்களிலும்) தமிழில்தான் இன்னமும் அது போடும் நேரத்தில் 'த்றில்' போய்விடும் என்பதால் the so called 'முற்போக்கான' எழுத்தாளர்களும் அதைத் தவிர்க்கிறார்கள். . இதனால் சென்ரிமென்ட்ஸ் + பெண்ணின் நெகிழ்ச்சி கெட்டுடும். அபஸ்வரம்! ஏன் சாரே, 'அவள் அவரைப்பற்றி எந்தவித உன்னத எண்ணங்களையும் அடையாமல் எழுந்துபோனாள்' என எழுதக்கூடாதா? 'நெகிழ்ச்சி' எண்ணம் பெண்ணுக்கு வரும்' என்கிற முடிவான உங்கள் 'மரபான எண்ணத்தோடு' இதை ஒரு முற்போக்கான, பேசாப்பொருளைப் பேசப்படுகிற கதையாய நீங்கள் முன்வைப்பதை நாங்கள் விமர்சிக்கக் கூடாதா? செக்ஸ் கதையென்றால் மட்டும்?அவளை ஒரு சாதாரண உங்கள் வீட்டுப் பெண்போல ('விடுதலை விரும்பி' என எழுதாமல்')எழுதியிருக்கக்கூடாதா? அவள் உறவுக்கு கொஞ்சநேரமுன் ஆணுறை போட்டால்/போடுவதைச் சொன்னால் உங்கள் பிரதியில் என்ன ஆகியிருக்ககும்? அதையும் பிரதியின் 'பேசாப்பொருள்' களில் ஒன்றாய் வாசகர்கள் 'ஊகித்து' "அவள் நிச்சயம் மாத்திரை போட்டுக்கொள்ளும் வகை என்பது சொல்லாமலே புரிபட்டிருக்க வேண்டும்" என்று எடுக்கவேண்டுமென்பது என்ன ஒரு எதிர்பார்ப்பு!
ஒரு முற்போக்கான/பேசாப்பொருளான கதைகளை/கட்டுரைகளை தொடர்ந்து எழுதப்போகிற நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்: அவள் ஏன் மாத்திரை போட்டுக்கொள்ளவேண்டும்? தலைவிதியா? அவளுக்கு உடலில் அதால் பக்கவிளைவுகள் உண்டென்பதோடு> எயிட்ஸ் போன்ற நோய்களிலிருந்து யாரு காப்பாத்துவது, அவளை, அந்த மனிதரின் மனைவியை? பார்த்தால் நாங்கள் 'இந்த 'றேஞ்சில' ஊகித்தால் ரெண்டு பெண்கள் பாதிக்கப்படபோகிறார்க்ள. ஒரு மத்திம ஆண் சுகமடைந்து 'டாட்டா' சொல்லிச் செல்கிறான்.
பிறகு இங்கு தொடர்ந்து நீங்கள் சொல்ல என்ன இருக்கு?
இதை விவாதிப்பதில்தான் என்ன 'த்றில்' இருக்கிறது? எனது கருத்தை சொன்னேன். அவ்வளவே.
ஒரு கும்பிடு.
"கர்பமாகிவிடும் பயம் என்பது உண்மைதான். ஆனால் கர்ப்பம் இப்போது இன்பம் சுகிக்க ஒரு தடையே இல்லை. அதற்கு பயந்து கொண்டு ஒரு பெண் சுகிக்காமல் இருப்பாள் என்று நம்பமுடியவில்லை. உஷாவின் கடிதத்தில் தொக்கலாக ஆண்களே சுகிக்கிறார்கள் என்பது போன்ற ஒரு தொனி இருக்கிறது. இருவர் இயைந்ததுதானே சுகம்? அதுதானே தாம்பத்யம்."
-நா.கண்ணன்
இந்தக் கதை(?)யின் மிகப் பெரிய பிரச்சினையே கடைசி இரு வரிகள்தான். அதற்கு பதிலளிப்பதை விடுத்து மேலிருக்கிற 'விளக்கம்' தரப்பட்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்து மேலும் 'அப்படி நினைத்தால் அது நடக்குமா, அது சினிமாவில்தான்' (அப்படி வேறு ஆசையா?) என்று வேறு. இப்படி 'ஒரு மத்திம ஆணுடைய விருப்பமாய் அவளுடைய சிந்தனையாய் (கடைசி இறுதி வரிகளிரும் கதை முழுதும்' எழுதிவிட்டு மற்றவர்களுக்கு
"...மேலும் உடல் என்பதுதான் பெண்ணா? அவளுக்கு வேறு அடையாளங்கள் கிடையாதா? பெண் மொழியில் உடல் பற்றி வரக்கூடாதா? சுகிக்கப்படுபவள் பெண் என்று சொல்வதே அபத்தமாகப்படுகிறது. சுகித்தல் இருவருக்கும் பொது. அவள் என்றும் நுகர்பொருளாக முடியாது, அவள் விரும்பினால் ஒழிய!" என்றெல்லாம்
'எதையோ' சொல்ல முயலுகிறீர்கள்.
என்னத்தை சொல்வது,
முக்கியமாய்,
"இந்த உடல் பற்றிய எண்ணங்களை இன்னொருமுறை தரிசிக்க வருவேன்." என்கிறபோது 'தயவுசெய்து வராதீர்கள்' எனத்தான் எழுதத் தோன்றுகிறது. ஆனால் உங்களது இந்தக் கதைகள் ஒரு நீண்ட பாரம்பரியம்'நெஞ்சு நிறைய' அப்புறம் ஓ யெஸ்! ருது வாகிறது பற்றிய கதை. etc etc. இப்படித் தொடர்ந்து எழுதத்தான் போகிறீர்கள்.
தயவுசெய்து 'விடுதலை விரும்பிற' பெண்கள் பற்றி எழுதிறன் பேர்வழி என அறிக்கை விடாதீர்கள். பாவம்! 2000 மாம் ஆண்டு சுமை அவர்களது தலையில். இதில் ஆண்டாளின் தைர்யம் ரொம்ப முக்கியம்.
அப்புறம் 'பேசாப்பொருள்' என்கிற சாமான் குறித்த எனது கருத்து:
முதிய ஆண்களின் இளம் பெண்களைப் புணரும் fantasy ஐ சிறுகதை என எழுதியிருக்கிறீர்கள். அதற்குச் சான்றாய் ஒவ்வொருமுறையும் 50 வயது 'அவர்' 'குளித்துவிட்டு வந்தபோது அவருக்கு 10 வயது குறைந்திருந்தது" என இருமுறைக்கு repeat வேறு செய்துள்ளீர்கள். உந்த சாயல் பற்றினது 8 வருடம் முந்தியா? பாலசந்தரின் 'கல்கி' வந்தபோதே விவாதத்திற்கும் மறுப்பிற்கும் உள்ளானது. பாலசந்தர் சொல்கிற 'புரட்சி'கூட தேவலாம்போல இருக்கு. இதில், அந்தக் காலத்து கதையைச் சொல்லிக்கொண்டு 'பின்நவீனத்துவம்' பற்றி வேறா? நான் இன்னமும் நீங்கள் எழுதிய'செந்தட்டி'யை மறக்கவில்லை. அது ஒரு நல்ல படைப்பென்பதால் அல்ல.
அன்புள்ள பொடிச்சி: இத்தனை நாட்களுக்குப் பின் இங்கு பின்னூட்டம் தந்ததற்கு நன்றி. நீங்கள் ஈழத்தவராய் இருப்பதால் என் கதைகளை படித்து அதன் பின்புலம் அறிந்திருக்கிறீர்கள். பாலியல் குறித்த கருத்து நாட்டுக்கு நாடு, ஆண்களுக்குள்ளும் பெண்களுக்கும் வேறுபடுகிறது. இந்தக் கதையை சீர் செய்திருக்கலாமென்று இப்போது தோன்றுகிறது. ஒரு brain stroming அப்போது தேவையாய் இருந்தது. இக்கருத்தை கட்டுரையாகக் கூட செய்திருக்கலாம். கதை எனும் போது அதன் தாக்கம் அதிகமாக இருப்பதை இந்தப் பின்னூட்டங்களே சொல்கின்றன. நெஞ்சு நிறைய, செந்தட்டி இவைகளில் ஒரு subtle comody உண்டு. அதை பலர் காண்பதில்லை. ருது எழுதக்கூடாத பொருளல்ல. என் எழுத்து வணிக எழுத்தல்ல. எனவே இதை ஒரு point of view என்று பாருங்கள். நம் ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்தில் சுதந்திரமுண்டு. நீங்கள் ஆங்கில இலக்கியம் படித்திருந்தால் நான் பேசுவதெல்லாம் வெறும் ஜுஜூப் என்று புரியும். தமிழர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறோம். யாரையும் புண் படுத்துவது நோக்கமல்ல. அதனால் இந்தப் பதிலும். வாசித்து பின்னூட்டங்கள் தந்த அனைவருக்கும் இன்னொருமுறை நன்றி. இந்த அலைகள் இன்னும் வீசிக்கொண்டு இருக்கின்றன பிற வலைப்பூக்களில். என் கருத்து இதில் முக்கியமே அல்ல.
நான் ஈழத்தவராய் இருப்பதால் உங்களின் கதையின் பின்புலம் தெரிந்திருக்கிறது என நீங்கள் எழுதுவது புரியவில்லை. ஈழம் தமிழ் இந்த அடையாளங்கள் இல்லாமலேயே இதையும் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
ருது, உடலுறவு இவை எழுதக்கூடாதென்பது அல்ல; எழுதுவது முன்னோக்கான தளத்தல் இருந்தா என்பதுதான். எனக்கு உங்களது புனைவுகளில் (அது தொடர்பான கட்டுரையில்) அது புலப்படவில்லை.