விடுபடல்கள்: அரசியலா அழகியலா?
கொங்குதேர் வாழ்க்கை - 2
சந்திப்பு: சித்தார்த்தன்
தமிழின் 2000 வருட நீண்ட கவிதைப் பரப்பில் ந. பிச்சமூர்த்தி தொடங்கி இன்றுவரை உள்ள புதுக் கவிஞர்ககளின் கவிதைகளில் தேர்ந்தெடுத்தவற்றை 'கொங்குதேர் வாழ்க்கை' என்னும் பெயரில் தொகுத்துள்ளீர்கள். இதில் சில கவிஞர்கள் - குறிப்பாகத் தி.சோ. வேணுகோபாலன்ää நாரணோ ஜெயராமன்ää பிரம்மராஜன்ää லஷ்மி மணிவண்ணன்ää என்.டி. ராஜ்குமார் போன்றவர்கள் - விடுபட்டுள்ளனர். இதன் பின்ணணியில் ஓர் இலக்கிய அரசியல் ஊடாடுவதாகப் பேசப்படுகிறது. நீங்கள் 'கொல்ýப்பாவை' சிறுபத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவர். 80ää 90களில் கவிதைகள் குறித்துத் தீவிரமான விமர்சனத் தளத்தில் இயங்கியவர். இதுபோன்ற பின்னணியில் உள்ள நீங்கள் தொகுத்துள்ள இத்தொகுப்பு சம்பந்தமாய் எழுந்துள்ள பிரச்சினை குறித்து உங்கள் விளக்கம் என்ன?
சங்க காலத்தில் தொடங்கி இன்றுவரையிலான தமிழ்க் கவிதைகளில் தேர்ந்தெடுத்த கவிதைகளின் 3 தொகுப்புகள் கொண்டுவருவதென்பது 'தமிழினி' வசந்தகுமாரின் திட்டம். முதல் தொகுப்பு (தொகுப்பாசிரியர்: எஸ். சிவகுமார்) சங்க காலத்திýருந்து வள்ளலார்வரை தொகுக்கப்பட்டு வெளி வந்துவிட்டது. அதன் பிறகான மரபு ஃ மரபு சார்ந்த கவிதைகளின் தொகுப்பு விரைவில் வெளிவர உள்ளது. நான்ää பிச்சமூர்த்தியிýருந்து இன்றுவரையிலான கவிஞர்கள்வரை தேர்ந்தெடுத்து 93 கவிஞர்களின் 893 கவிதைகளைத் தொகுத்துள்ளேன்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள கவிஞர்கள் உள்படச் சிலரை நான் சேர்க்கவில்லை. தி.சோ. வேணுகோபாலனைப் பொருத்த வரை பிச்சமூர்த்தியைப் படித்த கவிதை வாசகனுக்கு வேணு கோபாலனைப் படிக்கவேண்டியதில்லை. அதுபோலவே பசுவய்யாவின் அபரிமிதமான பாதிப்புக்கொண்டவர் நாரணோ ஜெயராமன் என்பதாலேயே சேர்க்கப்படவில்லை. பிரம்மராஜன் கவிதைகளைப் பற்றி நான் ஏற்கனவே பலமுறை எழுதியும் பேசியும் உள்ளேன். புதுக்கவிதைகளில் அவருக்குள்ள ஈடுபாடுää உலகக் கவிதைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியதில் அவர் பங்களிப்புää அவர் நடத்திய 'மீட்சி' பத்திரிகை குறித்தெல்லாம் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. எண்பதுகளில் புதுக்கவிதையில் நவீனத்துவத்தை அதிகமும் வýயுறுத்தியவர் பிரம்மராஜன். ஆனால்ää அந்த நவீனத்துவம் தமிழ் மனம் சார்ந்ததாக இல்லாமல் மேலைநாட்டுக் கவிதைப் போக்கின் அதீதத் தாக்கத்தாலும் படிப்பறிவின் மூலமான அனுபவ வெளிப்பாட்டினாலும் உருவானது. சோதனை முயற்சிக்காகவே சோதனை என்றானதாலும் திருகலான மொழி நடையினாலும் மொழிபெயர்ப்புக் கவிதைகளைப் படிப்பது போன்ற உணர்வைää அந்நியத் தன்மையை இவரது கவிதைகள் தோற்றுவித்துவிடுகின்றன. இதனாலேயே அவரது கவிதைகள் குறித்து மேலான அபிப்பிராயம் ஏதும் எனக்குக் கிடையாது.
தமிழ்ப் புதுக்கவிதையைப் பொருத்தவரையில்ää சி.சு. செல்லப்பாவின் தீவிரமான முயற்சியும் அவரது 'எழுத்து' பத்திரிகையும்தான் தமிழில் புதுக்கவிதை இந்த அளவில் வேரூன்றி வளர்வதற்குக் காரணமாக இருந்தன. புதுக்கவிதை வளர்ச்சியோடு இரண்டறக் கலந்துவிட்ட சிறுபத்திரிகை இயக்கங்கள்கூட செல்லப்பாவின் தொடர்ச்சியே. அவரும் தமிழில் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். புதுக் கவிதைகள் குறித்து நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறார். சுயமாக நிறையக் கவிதைகளும் எழுதியிருக்கிறார். ஆனால் அவரது கவிதைகள் என்னுள் எவ்விதமான பாதிப்பையும் நிகழ்த்தவில்லை. புதுக்கவிதை வளர்ச்சியில் அவரது 'எழுத்து' பத்திரிகையின் பங்களிப்புக் காரணமாக அவரது கவிதைகளையும் நான் மேலான கவிதைகள் எனக் கருத வேண்டியதன் அவசியமென்ன?
இன்றைய கவிஞர்களில் லஷ்மி மணிவண்ணனை ஏன் சேர்க்கவில்லை என்று சிலர் கேட்கின்றனர். அவரது கவிதைகளை முழுமையாகப் படித்த பின்னர்தான் இத்தொகுப்பில் சேர்க்காமல் நிராகரித்துள்ளேன். இன்றைய கவிதைக்கான மொழிநடையும் உருவமும் அவரது கவிதைகளில் சாத்தியமாகவில்லை. இதேபோலத் தலித் கவிஞர் எனப் பரவலாக அறியப்படுகிற என்.டி. ராஜ்குமார் கவிதைகள்கூட எதையோ பிரமாதமாகச் சொல்லும் பாவனையில் ஆரம்பித்து எந்த அனுபவத்தையும் தராமல் சிதைந்துபோய்விடுகின்றன.
தமிழில் வெளிவந்துள்ள அனைத்துக் கவிதைத் தொகுதிகளையும் கவனமாகப் படித்துத்தான் தேர்வுசெய்துள்ளேன். இவ்விடுபடல்களில் எவ்வித அரசியலும் இல்லை. தெளிவானää ஆழ்ந்த இலக்கியப் பிரக்ஞையுடனேயே இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கவிதை குறித்தான எனது பார்வைää அணுகுமுறையைப் 'புதுக்கவிதை வரலாறு' நூலில் தெளிவாகவே சொல்லியுள்ளேன்.
0 Comments:
Post a Comment
<< Home